தன்னுடைய இளம் வயதில் கமலஹாசன் நடித்த முதல் படம் அரங்கேற்றம். இந்தத் திரைப்படத்தில் கமல் அவர்களுக்கு வாய்ப்பு கிடைத்ததை குறித்த சுவாரசியமான தகவல்களை இந்த பதிவில் காண்போம்.
திடீரென ஒரு நாள் கமலஹாசன் அவர்களுக்கு பாலச்சந்தரிடம் இருந்து அழைப்பு வந்துள்ளது. தனக்கு உதவி இயக்குனராக பணிபுரிய தான் அழைப்பு வந்துள்ளது என எண்ணி வேகமாக படப்பிடிப்பு தளத்திற்கு சென்ற கமலஹாசனிடம், நீ இந்த படத்தில் நடிக்க வேண்டும் என பாலச்சந்தர் அவர்கள் தெரிவித்திருக்கிறார்.
ஆனால் தான் உதவி இயக்குனராக பணிபுரிய தான் அழைத்ததாக நினைத்து வந்தேன் என கமலஹாசன் கூற, பாலசுந்தர் அவர்கள் நீ இந்த படத்தில் நடிக்கிறாய் என்று கட்டாயமாக கூறிவிட்டாராம். அதன்பின் யோசித்த கமலஹாசன் அவர்கள் பாலச்சந்தரின் திரைப்படத்தில் நடிப்பதற்காக வாய்ப்பு தேடி பல இளைஞர்கள் வெளியில் நின்று கொண்டிருந்ததை பார்த்து இன்று விட்டால் இந்த சந்தர்ப்பமானது மீண்டும் கிடைக்காது என நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார்.
அரங்கேற்றம் திரைப்படத்தில் பிரமிளாவிற்கு தம்பியாக கமலஹாசன் அவர்கள் நடித்திருந்தார். படப்பிடிப்பு தாளத்தில் கமலஹாசன் உடைய முகபாவனைகளைக் கண்ட இயக்குனர் சிகரம் பாலச்சந்தர் அவர்கள் இவனுக்கு மிகப்பெரிய ஸ்கோப் உள்ளது என துணை இயக்குனரிடம் தெரிவித்திருக்கிறார். அதுமட்டுமின்றி இவருக்காகவே கிளைமாக்ஸ்சில் முக்கிய சீன் ஒன்றினையும் தயாரித்து வைத்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
திரைப்படத்திற்காக கமலஹாசன் அவர்களுக்கு 500 ரூபாய் சம்பளமாக கொடுக்கப்பட்ட பொழுது இவ்வளவுதானா என கோபமாக கேட்டிருக்கிறார். அதற்கு இது உன்னுடைய முயற்சி ஓட்டம் தான். நீ நன்றாக நடித்திருப்பதாக அனைவரும் தெரிவிக்கின்றனர் எனக் கூறிய உடன் கமலஹாசன் அவர்கள் அமைதியாக சென்றதாக பிரபல தயாரிப்பாளர் சித்ரா லக்ஷ்மணன் அவர்கள் தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.