நான் பேசிய 2 நிமிட வீடியோ டிவியில் வரவில்லை! அதனால் விருது வேண்டாம்! பாலாஜி முருகதாஸ்!

Photo of author

By Kowsalya

நான் பேசிய 2 நிமிட வீடியோ டிவியில் வரவில்லை! அதனால் விருது வேண்டாம்! பாலாஜி முருகதாஸ்!

Kowsalya

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 4 என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமடைந்தவர் தான் பாலாஜி முருகதாஸ். அவர் இப்பொழுது பி behind woods கொடுத்த விருதை வேண்டாம் என்று திருப்பி தந்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

பிக் பாஸ் வீட்டில் 100 நாட்கள் இருந்து 2-வது இடத்தை பிடித்தவர் பாலாஜி முருகதாஸ். இவருக்கு வெளியில் பல எதிர்ப்புகள் இருந்தாலும், வெளியில் கெத்தாக இருந்து வருகிறார். இதற்கு முன்னும் பல குறும்படங்கள் மற்றும் பாடல்கள் ஆகியவற்றில் நடித்துள்ளார்.

 

சமீபத்தில் அவருக்கு பிகைண்ட்வுட்ஸ் சார்பாக ஒரு விருது வழங்கப்பட்டது. தற்போது அந்த விருதை வேண்டாம் என்று பிகைண்ட்வுட்ஸ்க்கு திருப்பித் தந்து உள்ளாராம் பாலாஜி முருகதாஸ்.

 

அதைப் பற்றி டுவிட்டரில் கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும் வீடியோவும் வெளி வந்தது ஒருத்தரை தவிர, நான் பேசிய 2 நிமிட வீடியோவை டிவியில் ஒளிபரப்ப வில்லை. எந்தவொரு பின்புலமும் இல்லாமல் நான் வந்தது தான் காரணமா? ஆமாம், என் இதயத்தில் இருந்து வரும் பேச்சுக்களை யாராலும் தடுக்க முடியாது! என்ற கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

ஆனால் இதுகுறித்து பாலாஜி வீடியோவை வெளியிடாததற்கான காரணம் தொகுப்பாளரை தவறாக பேசியது தான் என்று அவர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதை தன்னை அவமானப்படுத்தும் விதமாக உள்ளது என்று பாலாஜி முருகதாஸ் தெரிவித்துள்ளார்.