முகத்தை தங்கம் போல் மின்ன வைக்கும் பலாக்கொட்டை பேசியல்!! இதை செய்து பாருங்கள் 10 வயது குறைந்தது போல் தோன்றும்!!
பலாப்பழ விதைகளின் பல நன்மைகள் அவற்றை பெரும்பாலான உணவுகளில் அவசியம் இருக்க வேண்டும். பலாப்பழம் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களால் நிரம்பியுள்ளது. பழத்தின் உண்ணக்கூடிய விதைகளில் புரதங்கள் மற்றும் அத்தியாவசிய நுண்ணூட்டச்சத்துக்கள் உள்ளன, அவை தோல் நோய்களிலிருந்து பாதுகாக்க உதவுகின்றன, மேலும் விதைகளில் உள்ள இரும்புச்சத்து இரத்த சோகைக்கு கூட சிகிச்சையளிக்கும். விதைகள் உங்கள் கண் ஆரோக்கியத்தை பராமரிக்க மற்றும் உங்கள் ஆற்றலை அதிகரிக்கிறது. பலாப்பழக்கோட்டையில் இருந்து முகம் இளமையாக இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி பார்க்கலாம்.
இது உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால் நம் முன் வைரமாயிரம் காலங்களாக பலாப்பழ கொட்டையை அரைத்து முகத்தில் பூசி வந்துள்ளார்கள் என்பது உண்மை. பாதாம்மைவிட 100 மடங்கு சக்தி வாய்ந்த ஒன்று. இது நம் உடலில் உள்ள சுருக்கத்தை குறைத்து இளமையாக வைக்க உதவுகிறது.
தேவையான பொருட்கள்:
1. பலாப்பழ கொட்டை
2. தேன்
3. பால் அல்லது பால் ஆடை
செய்முறை:
முதலில் பலாப்பழம் என்பது வருட முழுவதும் கிடைக்கக்கூடியது அல்ல. ஆகையால் பலாக்கொட்டையும் நமக்கு வருடம் முழுவதும் கிடைக்காது . எனவே பவக்ஷலாக்கொட்டை கிடைக்கும் பொழுது அதை எடுத்து நிழலில் உலர்த்தி தோல் நீக்கி பத்திரமாக சேமித்து வைத்துக் கொள்ளுங்கள்.
பின்னர் இதனை நமக்கு தேவையான பொழுதெல்லாம் அரைத்து பொடியாக்கிக் கொள்ளவும். இதனை ஒரு கண்ணாடி பாட்டில் சேகரித்துக் கொள்ளுங்கள்.
இதனுடன் தேன் சேர்த்து கலக்கி முகத்தில் பயன்படுத்தி வருகையில் முகச்சுருக்கம் இல்லாமல் இளமையாக இருக்கலாம் அல்லது பால் மற்றும் பால் ஆடை சேர்த்தும் பயன்படுத்தி வரலாம்.
இவ்வாறு தொடர்ந்து செய்து வருகையில் முகப்பொலிவு பெற்று நம் வயது குறைந்தது போன்ற தோற்றம் பெறுவீர்கள். இதனை பயன்படுத்தி கட்டாயம் அதனுடைய நன்மைகளை பெற்று மகிழ்வீர்கள்.