மூட்டு வலியை விரட்டி அடிக்கும் மூங்கில் அரிசி!!! இதன் மற்ற நன்மைகள் என்னென்ன என்று தெரிந்து கொள்ளுங்கள்!!!
மூங்கில் அரிசியை நாம் உணவாக பயன்படுத்தும் பொழுது நமக்கு ஏற்படும் பல பிரச்சனைகள் குணப்படுத்தப்படுகின்றது. இந்த மூங்கில் அரிசியை பயன்படுத்தும் பொழுது கிடைக்கும் நன்மைகள் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
மூங்கில் அரிசி என்பது மூங்கிலில் இருந்து பெறப்படுகின்றது. இந்த மூங்கில் அரிசியில் வைட்டமின் பி6 சத்துக்கள் அதிகளவில் உள்ளது. அரிசி மற்றும் கோதுமையில் உள்ள புரதச் சத்துக்களை விட மூங்கில் அரிசியில் அதிகளவு புரதச் சத்துக்கள் இருக்கின்றது. மேலும் மூங்கில் அரிசியில் நார்ச்சத்துக்கள், கால்சியம், விட்டமின் பி1, கரோட்டின், நிகோடிக் அமிலம், அமினோ அமிலங்கள் போன்ற சத்துக்களும் உள்ளது. இந்த மூங்கில் அரிசியை பயன்படுத்தும் பொழுது நமக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி இனி தெரிந்து கொள்ளலாம்.
மூங்கில் அரிசியின் மூலமாக கிடைக்கும் நன்மைகள்…
* மலட்டுத் தன்மை இருப்பவர்கள் அனைவரும் மூங்கில் அரிசியை பயன்படுத்தலாம். இதன் மூலமாக மலட்டுத் தன்மை சரி செய்யலாம்.
* நமது உடலில் ஏற்படும் அனைத்து விதமான வலிகளையும் மூங்கில் அரிசி குணப்படுத்துகின்றது. நமக்கு ஏற்படும் முதுகு வலி பிரச்சனையை அடியோடு குணப்படுத்த மூங்கில் அரிசியை உணவாக சமைத்து சாப்பிடலாம்.
* மூட்டு வலி பிரச்சனை உள்ளவர்கள் யாராக இருந்தாலும் எந்த வயது உள்ளவராக இருந்தாலும் மூங்கில் அரிசியை பயன்படுத்தி சாப்பாடு செய்து சாப்பிட்டு வந்தால் மூட்டு வலி பிரச்சனை குணமடையும்.
* மூங்கில் அரிசியை சாப்பிட்டு வந்தால் நமது உடலில் உள்ள கொலஸ்ட்ரால் பிரச்சனை சரியாகும். இந்த மூங்கில் அரிசியை பயன்படுத்தும் பொழுது கெட்ட கொழுப்புகள் கரைந்து உடல் எடையை குறைக்க செய்யும்.
இந்த மூங்கில் அரிசியை நாம் கஞ்சியாக தயார் செய்து எடுத்துக் கொள்ளலாம். மூங்கில் அரிசியை தினமும் பயன்படுத்த வேண்டும் என்பது கட்டாயம் இல்லை. வாரத்திற்கு இரண்டு முறை மூங்கில் அரிசியை பயன்படுத்தலாம். அளவுக்கு அதிகமாக மூங்கில் அரிசியை எடுத்துக் கொண்டால் அதுவே சில ஆபத்துக்களையும் கொண்டு வரும் என்பதை மறந்து விடாதீர்கள்.