திருவண்ணாமலையை சேர்ந்த கார்த்திக் என்பவர் நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்தார். 1992-ஆம் வருடம் ராஜேந்திரன் என்பவர் 92.5 அடி நிலம் விற்கப்பட்ட சூழ்நிலையில், அருகிலுள்ள 215 சதுர அடி பொது இடத்தை ஆக்கிரமிப்பு செய்து அங்கு திமுகவைச் சார்ந்த மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலை வைக்க மாவட்ட திமுகவைச் சேர்ந்தவர்கள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்
. அதோடு கிரிவலப் பாதை மற்றும் நெடுஞ்சாலையை இணைக்கும் இடத்தில் கருணாநிதியின் சிலை வைக்க ஏற்பாடு செய்யப்படுவதால் அதனை அனுமதிக்கக்கூடாது என்று தெரிவித்திருந்தார்.
சிலை வைப்பதாக தெரிவிக்கப்படும் இடத்தை நேரில் ஆய்வு செய்தும், வருவாய்த்துறை ஆவணங்களை ஆய்வு செய்தும், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் நேற்று அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை முடியும் வரை சிலை அமைக்கும் விவகாரத்தில் தற்போதுள்ள நிலையே நீடிக்க வேண்டும், என நீதிபதிகள் உத்தரவிட்டார்கள்.
இந்த நிலையில், திருவண்ணாமலையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சிலை நிறுவ சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்திருக்கிறது.
எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுகள் தீவிரமானவை மற்றும் கிரிவலம் பாதையை பயன்படுத்தும் பொது மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் என்றும் தெரிவித்து நீதிபதி எஸ் எம் சுப்பிரமணியம் மற்றும் நீதிபதி சத்யநாராயண பிரசாத் அடங்கிய விடுமுறைகால பெஞ்ச் இன்று தடை விதித்து உத்தரவிட்டிருக்கிறது.