டாஸ்மாக் கடைகளில் மது விற்பனைக்கு தடை.. உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!!

0
353
Ban on sale of alcohol in Tasmac shops.. Action order of High Court!!
Ban on sale of alcohol in Tasmac shops.. Action order of High Court!!

டாஸ்மாக் கடைகளில் மது விற்பனைக்கு தடை.. உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!!

சமீபத்தில் மதுரங்கத்தில் கள்ள சாராயம் அருந்தி 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த விவகாரம் தமிழகத்தையே உலுக்கிய நிலையில், இதற்கு காரணம் தமிழக அரசு தான் இன்று எதிர்க்கட்சி என தொடங்கி பல கட்சிகளும் கண்டனம் தெரிவித்து வருகிறது.

இதனை சமாளிப்பதற்காகவே முதல்வர் ஸ்டாலின் நிதி உதவி அளித்து இதனை மூடி மறைக்க நினைக்கிறார். ஆனால் இது குறித்து பல கேள்விகள் தமிழக அரசை நோக்கி இருந்து கொண்டே தான் வருகிறது.அந்த வகையில் கோவையை சேர்ந்த பூமி ராஜ் என்பவர் மதுரங்கத்தில் இறந்ததை சுட்டிக்காட்டியும், மேற்கொண்டு டாஸ்மாக் உடன் இருக்கும் பார்களில் சரக்குகள் சேகரித்து வைக்க கூடாது என்று நிபந்தனைகள் இருந்தும் தமிழ்நாட்டில் பல இடங்களில் அவ்வாறு தான் செய்து வருகின்றனர்.

அது மட்டுமின்றி அது தரமானதாக இருக்கிறதா என்பதும் தெரியவில்லை எனவே மதுபான கடைகளில் மதுபானங்களை விற்க தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை விசாரணை செய்த நீதிபதிகள், மதுபானங்கள் டாஸ்மாக்கில் விற்பனை செய்வதை தடை செய்ய முடியாது என்றும், அரசுக்கு தெரியும் எவ்வாறு கடைகளை  நடத்த வேண்டும் என்பது எனக் கூறி இந்த வழக்கை அடுத்த மாதத்திற்கு ஒத்திவைத்து உத்தரவிட்டு உள்ளனர்.

Previous articleஐயோ அம்மா வலிக்குது..  மருமகளின் அந்தரங்க உறுப்பில் மாமியார் செய்த விபரீதம்!!
Next article1500 மாணவர்களை சந்திக்கிறார் விஜய்!! அரசியல் பிரவேசம் காரணமா?