ரூ.200 மற்றும் ரூ.500 நோட்டுக்கள் பயன்படுத்துவதற்கு வரப்போகும் தடை!! மீண்டும் பண மதிப்பிழப்பு நடவடிக்கை?
கருப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட மத்திய அரசு கடந்த 2016 ஆம் ஆண்டு ரூ.500 மற்றும் ரூ.1000 செல்லாது என்று அறிவித்தது.பின்னர் ரூ.2000 தாளை அறிமுகப்படுத்தியது.அதன் பின்னர் ரூ.10,ரூ.20,ரூ.50,ரூ.100,ரூ.200.ரூ.500 உள்ளிட்ட ரூபாய் தாள்களை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.
கருப்பு பணத்தை ஒழிக்கும் நோக்கில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.ஆனால் ரூ.2000 தாள் பொதுமக்கள் புழக்கத்திற்கு வந்த பின்னர் அவை மெல்ல மெல்ல காணாமல் போனது.அதாவது சட்ட விரோதமாக கருப்பு பணம் பதுக்கி வைக்கும் செயல்பாடுகள் அதிகரித்து வந்தால் ரூ.2000 தாளை பார்ப்பது அரிதான ஒன்றாக மாறியது.
இந்நிலையில் கடந்த ஆண்டு மக்களிடம் இருந்து ரூ.2000 தாள் பெறப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்து அதை நடைமுறை படுத்தியது.இந்நிலையில் ரூ.200 மற்றும் ரூ.500 தாள்களை செல்லாது என்று அறிவிக்க வேண்டுமென்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மத்திய அரசிடம் கோரிக்கை வைத்திருக்கிறார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் முக்கிய நபரும் ஆந்திர மாநில முதல்வருமான சந்திரபாபு நாயுடு அவர்கள் அமராவதியில் உள்ள தலைமைச் செயலகத்தில் மாநில வங்கியாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.இக்கூட்டத்தில் ரூ.200 மற்றும் ரூ.500 செல்லாது என்பது குறித்து மத்திய அரசு அறிவிக்க வேண்டுமென்று கருத்து தெரிவித்திருக்கிறார்.
மேலும் கடந்த 5 ஆண்டுகளில் சிலர் பெரும் தொகையை கொள்ளையடித்திருப்பதால் ரூ.200 மற்றும் ரூ.500 தாள்கள் செல்லாது என அறிவிக்க வேண்டுமென்று மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருக்கிறார்.கரன்சி நோட்டுகளுக்கு பதில் டிஜிட்டல் நோட்டுகளை வங்கிகள் ஊக்குவிக்க வேண்டுமென்று தெரிவித்திருக்கிறார்.
சந்திரபாபுவின் இந்த கருத்தால் மீண்டும் பணமதிப்பிழப்பு குறித்த விவாதம் தொடங்கியுள்ளது.சந்திரபாபு நாயுடு இவ்வாறு கோரிக்கை வைப்பது முதல்முறை அல்ல.ஏற்கனவே கடந்த 2017ஆம் ஆண்டு ரூ.200 மற்றும் ரூ.500 நோட்டுகளை தடை செய்ய வேண்டுமென்று மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தார் என்பது நினைவு கூறத்தக்கது.