வாழைப்பழ அப்பம்! இதோ உங்களுக்காக!
தேவையான பொருட்கள் :கோதுமை மாவுஅரை கப் ,அரிசி மாவு இரண்டு கப், நன்கு கனிந்த வாழைப்பழம் இரண்டு, வெல்லம் இரண்டு கப் ,தேங்காய் பல் சிறிதளவு, இரண்டு டேபிள் ஸ்பூன், ஏலக்காய்தூள் ஒரு டீஸ்பூன், நெய்அரை கப், தேவையான அளவு எண்ணெய், ஆப்ப சோடா இரண்டு.
செய்முறை :
முதலில் கோதுமை மாவு மற்றும் அரிசி மாவினை ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும்.பழத்தைத் துண்டுகளாக்கி, மிக்ஸியில் அடித்து மாவுடன் சேர்த்து கொள்ள வேண்டும்..தேங்காய் துண்டுகளை ஒரு டேபிள் ஸ்பூன் நெய்யில் சிவக்க வறுத்து அதனையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
அதன் பிறகு வெல்லத்தை அரை கப் தண்ணீர் ஊற்றி, அடுப்பில் வைத்து கரைந்து கொதித்ததும் வடிகட்டி சூடாக உள்ள மாவில் சேர்க்க வேண்டும்.
மேலும் அத்துடன் ஏலக்காய்தூள், ஆப்ப சோடா சேர்த்து நன்கு கரைக்க வேண்டும். இந்த மாவானது இட்லி மாவு பதத்தில் இருக்க வேண்டும்.குழிப் பணியாரக் கல்லில் நெய், எண்ணெய் கலந்து ஊற்றி மாவு சிறிது ஊற்றி சிறு தீயில் நன்கு வேக விட வேண்டும்