231 ரன்னில் சுருண்டது வங்காளதேசம்! வெற்றி இலக்கை நோக்கி இந்தியா!!

Photo of author

By Amutha

231 ரன்னில் சுருண்டது வங்காளதேசம்! வெற்றி இலக்கை நோக்கி இந்தியா!!

இந்தியாவிற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் 2- வது இன்னிங்க்ஸில் 231 ரன்களில் வங்காள தேசம் சுருண்டது.

இந்தியா வங்காளதேச அணியுடன் 2போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றது. சட்டிங்காமில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா 188  ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. வங்காளம் முதல் இன்னிங்க்ஸில் பாலோ-ஆன் ஆனது.

இந்நிலையில்  2-வது டெஸ்ட் போட்டியின் முதலாவது இன்னிங்க்ஸில் வவங்காளம் 227 ரன்களும் இந்தியா 314 ரன்களும் எடுத்து  87  ரன்கள் இந்தியா முன்னிலையுடன் இரண்டாவது டெஸ்ட் தொடரின் இரண்டாவது இன்னிங்க்ஸ் மிர்பூரில் நடைபெற்று வருகின்றது. இதில் விக்கெட் இழப்பின்றி விளையாடிய வங்காளம் இரண்டாவது நாளில் விக்கெட் இழப்பின்றி 7 ரன்கள் எடுத்தது.

இன்று தொடங்கிய 3-வது நாளில் அஸ்வின் தொடக்க ஜோடியான நஜ்முல் உசேன்- ஜாகீர் ஹுசேனை பிரித்தார். அப்போது ஸ்கோர் 13 ஆக இருந்த நிலையில் ஜாகீர் உடன் மொமினுல் ஹக் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியையும் இந்திய பவுலர்கள் விடவில்லை. சிராஜ் பந்தில் மொமினுல் 5 ரன்னில் பெவிலியன் திரும்பினார்.

3-வது விக்கெட்டுக்கு ஜாகிருடன் ஷாஹிப்-அல் ஹசன் சேர்ந்து 50 ரன்களை கடந்தனர்.  இதையும் ஜெயதேவ் உனத்கட் பிரித்தார். வங்காளதேசம் 70 ரன்களில் 4 விக்கெட்டுகளை இழந்தது. உணவு இடைவேளைக்கு பின் நிதானமாக ஆடிய ஜாகீர் 51  லிட்டன் தாஸ் 73 ரன்களும் எடுத்து நம்பிக்கை அளித்தனர். இறுதியில் 231 ரன்களுக்கு வங்காள தேசம் ஆல் அவுட் ஆனது. அக்சர் படேல் 3, அஸ்வின், சிராஜ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இந்நிலையில் இந்தியாவின் வெற்றிக்கு 145 ரன்கள் தேவை என்ற எளிதான இலக்குடன் ஆடத் தொடங்கிய வீரர்கள் 12 ரன்களுக்குள் 2 விக்கெட்டுகளை இழந்தனர்.ராகுல் 2 ரன்னிலும் அக்சர் படேல் 12 ரன்களிலும் வெளியேறினர். அடுத்து வந்த கோலி சொற்ப ரன்னில் வெளியேற இந்திய அணி தற்போது 4 விக்கெட் இழப்பிற்கு 45 ரன்கள் எடுத்துள்ளது. அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிவு இந்திய அணியின் வெற்றியை சற்று கடினமாக்கியுள்ளது. வெற்றி இலக்கை இந்திய எட்டுமா? என இனி வரும் ஆட்டத்தில் பார்க்கலாம்.