வங்கதேச அணி தயார்! இந்தியாவுடனான முதலாவது டெஸ்ட் போட்டிக்கான வீரர்கள் தேர்வு!!
இந்தியாவுக்கு எதிராக நடக்கும் முதலாவது டெஸ்ட் தொடருக்கான வங்காளதேச அணி வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்திய அணி 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக வங்காளதேசம் சென்றுள்ளது. மிர்பூரில் நடந்த முதலாவது ஒருநாள் போட்டியில் 1-0 என்ற கணக்கில் வங்காளதேசம் வெற்றிப்பெற்றது. மேலும் மிர்பூரில் நடந்த எதிர்ப்பார்ப்பு மிகுந்த பரபரப்பான இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் ஹசன் மிராஸ் சதம் உடன் 2-0 என்ற கணக்கில் வங்காளதேசம் வெற்றிப்பெற்று தொடரை வென்றது.
மூன்றாவது ஒருநாள் போட்டி நாளை நடக்கிறது. ஒருநாள் போட்டி முடிந்தவுடன் வங்காளதேசம் உடன் 2 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா விடுகிறது. இவ்விரு அணிகளுக்கிடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி டிசம்பர் 14ந் தேதி தொடங்க இருக்கிறது. இந்த போட்டிக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது.
இந்நிலையில் வங்காள தேச அணிக்கான வீர்கள் தேர்வு செய்து பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ஷஹிப் அல் ஹசன் தலைமையில் அணி வீரர்கள் பட்டியல் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
முதல் டெஸ்ட் போட்டிக்கான அணி வீரர்கள் விவரம்;
ஷஹிப் அல் ஹசன்(கேப்டன்), மக்முதுல் ஹசன் ஜாய், மொமினுல் ஹக், முஷ்பிகுர் ரஹீம், நஜ்முல் ஹசன் சாண்டோ, யாசிர் அலி சவுத்ரி, நூருல் ஹசன், லிட்டன் தாஸ், தைஜூல் இஸ்லாம், மெஹிதி ஹசன் மிராஸ், தஷ்கின் அஹமது, எபடாட் ஹொசைன், சையத் காலித் அஹமது, ஷோரிபுல் இஸ்லாம், ஜாகிர் ஹசன், ரேஜவூர் ரகுமான் ராஜா, அனாமுல் ஹக் பிஜாய்,