மோடியால் பற்றி எறியும் வங்கதேசம்! இதுவரை 11 பேர் உயிரிழப்பு!

Photo of author

By Rupa

மோடியால் பற்றி எறியும் வங்கதேசம்! இதுவரை 11 பேர் உயிரிழப்பு!

கொரோனா பரவல் குறைந்தும்,அதிகரித்தும் வரும் நிலையில் வங்காள தேசத்திற்கு சிறப்பு விருந்தினாராக சென்றுள்ளார்.பாகிஸ்தானிலிருந்து வங்காளதேசம் தனி நாடக 1971 ஆம் ஆண்டு பிரிந்தது.அது பிரிவதற்கு முக்கிய பங்கு இந்தியாவிற்கு உள்ளது.அதனால் அந்நாட்டின் சுதந்திர பொன்விழாவில் கலந்துக்கொள்ள மோடியை அந்நாட்டின் பிரதமர் ஷேக் ஹசினா அழைத்துள்ளார்.

அந்த அழைப்பை ஏற்று மோடி 2 நாள் சுற்று பயணமாக தனி விமானம் மூலம் தலைநகர் டக்கா விமான நிலையத்திற்கு சென்று இறங்கினார்.அதன்பின் அந்நாட்டின் பிரதமர் ஷேக் ஹசினா மோடிக்கு மலர்கொத்துக் கொடுத்து வரவேற்றார்.அதனையடுத்து நமது மோடி 1971 ஆம் ஆண்டு வங்காளதேச சுதந்திர போரில் உயிரிழிந்த வீரர்களின் நினைவாக எழுப்பப் பட்டுள்ள போர் வீரர்களின் நினைவுச்சின்னத்திற்கு மரியாதை செலுத்தினார்.

அதன்பின் பல்வேறு நிகழ்சிகளில் கலந்துக்கொண்டார்.இரண்டாவது நாளன்று அந்நாட்டில் மிகவும் பிரசித் பெற்ற ஹுல்னா மாகாணம் சட்ஹூரா மாவட்டத்தில் ஈச்வரிப்பூர் பகுதிலுள்ள ஜேஷோரிஸ்வரி காளி கோவிலுக்கு சென்று பிரதமர் மோடி பிராத்தனை செய்தார்.அதன்பின் வெளியே வந்து அங்குள்ள செய்தியாளர்களை சந்தித்தார்.அவர்களிடம் கூறியது,இந்த கோவில்சக்தி பீடத்தில் உள்ள காளி அம்மனை வழிபட இன்று எனக்கு வாய்ப்பு அமைந்துள்ளது.நான் காளி அம்மனிடம் கொரோனாவிலிருந்து மக்கள் விடுபட வேண்டுமென்று பிராத்தித்ததாக கூறினார்.

இந்த கோவிலில் காளி அம்மன் மேளா நடைபெறும்.அப்போது இந்தியா மற்றும் வெளி ஊர்களிலிருந்தும் மக்கள் அதிபடியானோர் வருவார்கள் அவர்களுக்கு பயன் தரும் வகையில் ஒரு சமூக நலக்கூடம் அமைக்க தேவை உள்ளது எனக் கூறினார்.அப்போது தான் காளி பூஜை அன்று வருபவர்களுக்கு தங்க வசதியாக இருக்கும் என்றார்.

இவர் வருகையை எதிர்த்து வந்கதேசமானது பற்றி எரிகிறது.சிறப்புவிருந்தினாரக சென்ற மோடியை எதிர்த்து அங்குள்ள இஸ்லாமிய அமைப்பினர் தொடங்கிய போராட்டம்,மோடி டெல்லி திரும்பிய பிறகும் நீடித்து வருகிறது.அந்தவகையில் பல்வேறு அரசு அலுவலங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டது.ஊடக சங்கங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.

கிழக்கு வங்கதேசத்தில் உள்ள பிரான்பாரிய மாவட்டத்தில் ரயில் மீது ஹெபிசத் இஸ்லாமிய அமைப்பினர் தாக்குதல் நடத்தினர்.இதில் 10 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.ஹெபிசத் என்று இசலாமிய அமைப்பினர் கொடுத்த நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டம் பெரும் சர்ச்சையாக வெடித்தது.தலைநகர் டாக்கா,சிட்டகாங் ஆகிய நகரங்களை இணைக்கும் நெடுஞ்சாலையில்  போரட்டாகரார்கள் வாகனங்களையும்,டயர்களையும் கொளுத்தினர்.

அவர்களை நோக்கி ராணுவத்தினரும்,காவல்துறையினரும் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.3 நாட்களாக நடக்கும் இந்த கலவர போராட்டத்தில் ராணுவம் மற்றும் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர்.அதிகபடியனோர் படுகாயமும் அடைந்துள்ளனர்.இன்று வரை கட்டுக்குள் வராமல் வன்முறை நடந்து வருவதால் வங்கதேச ராணுவம் மற்றும் காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.