தொடரை வென்றது வங்காளதேச அணி! பரிதாபத்தில் ஆஸ்திரேலியா!

Photo of author

By Sakthi

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி பங்களாதேஷில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதற்கு முன்னதாக நடந்த 4 போட்டிகளில் வங்காளதேசம் 3 போட்டியிலும் ஆஸ்திரேலிய அணி ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றது. இந்த நிலையில், இருந்த அணிகளுக்கும் இடையிலான 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்றைய தினம் டாக்காவில் நடந்தது.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதனடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 122 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அந்த அணியில் அதிகபட்சமாக நயீம் 23 ரன்கள் சேர்த்தார். ஆஸ்திரேலிய அணியின் சார்பாக நாதன் எல்லிஸ் கிறிஸ்டியன் தலா இரண்டு விக்கெட்டுகளை எடுத்திருக்கிறார்கள். இதனைத்தொடர்ந்து 123 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி பங்களாதேஷின் துல்லியமான பந்து வீச்சு காரணமாக, மிக விரைவில் ஆட்டம் இழந்தது.

ஆஸ்திரேலிய அணி 13.5 ஓவரில் 62 ரன்னில் பரிதாபமாக ஆட்டம் இழந்தது. அதிகபட்சமாக கேப்டன் 22 ரன்கள் சேர்த்தார் இதன் காரணமாக, 60 ரன்கள் வித்தியாசத்தில் வங்காளதேச அணி அபாரமாக வெற்றியடைந்தது.அந்த அணியின் சார்பாக ஷாகிப் அல் ஹசன் நான்கு கேட்டுக்கொள்ளும் முகமது சைபுதீன் 3 விக்கெட்டுகளையும், நகம் அகமது 2 விக்கெட்டுகளையும், கைப்பற்றினர்இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை வங்காளதேச அணி 4 இற்கு 1 என்ற கணக்கில் வெற்றியடைந்தது. ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை ஷகிப் அல் ஹசன் கைப்பற்றியிருக்கிறார்.