வங்கதேச பவுலரை கதறவிட்ட ஆஸ்திரேலிய புலி!

0
75

சென்ற மாதம் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மிக மோசமாக தொடரை இழந்த ஆஸ்திரேலிய அணி தற்சமயம் வங்கதேசத்திடம் தொடரை இழந்து நிற்கிறது.

டி20 உலகக் கோப்பை தொடர் எதிர்வரும் நவம்பர் மாதம் அமீரகத்தில் ஆரம்பிக்க இருக்கின்ற சூழலில் பல அணிகள் டி20 போட்டிகளில் அதிகம் விளையாடி வருகின்றன. அதன்படி ஆஸ்திரேலியாவும் அடுத்தடுத்த டி20 போட்டிகளில் விளையாடி வருகின்றது. சென்றமாதம் வெஸ்ட் இண்டீஸ் நாட்டுக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி டீடெயில் தொடரை மிகவும் மோசமாக இழந்தது இந்த சூழ்நிலையில் வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் செய்த ஆஸ்திரேலியா அங்கேயே 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகின்றது. இதில் முதல் மூன்று போட்டிகளிலும் ஆஸ்திரேலியா மிக மோசமான தோல்வியை சந்தித்தது. அதோடு தொடரையும் இழந்தது.

இந்த சூழ்நிலையில், சென்ற ஏழாம் தேதி நடைபெற்ற நான்காவது டி20 போட்டியில் ஆஸ்திரேலியா அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்த தொடரில் தன்னுடைய முதல் வெற்றியை பதிவு செய்திருந்தது. இதில் முதலில் பேட்டிங் செய்த வங்காளதேச அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 104 ரன்களை சேர்த்தது. தொடர்ச்சியாக ஆஸ்திரேலிய அணி 19 ஓவரில் 7 விக்கெட்டுகளை இழந்து 105 ரன்கள் சேர்த்து வெற்றியடைந்தது. இந்த வெற்றி தொடரில் எந்தவிதமான பாதிப்பையும் ஏற்படுத்தாது ஆனாலும் கூட அதிகபட்சமாக இந்த போட்டி ரசிகர்களால் கவனிக்கப்படவில்லை இருந்தாலும் இதில் எந்தவிதமான சத்தமும் இல்லாமல் ஒரு சம்பவம் நடந்திருக்கிறது.

தன்னுடைய வாழ்நாளில் மிக மோசமான பவுலிங்கை உலகின் மிகச் சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவராக இருக்கும் ஷகிப் அல் ஹசன் பதிவு செய்து இருக்கின்றார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மூன்றாவது ஓவரை வீசுவதற்கு களமிறங்கிய அவர் நிச்சயமாக எதிர்பார்த்திருக்க மாட்டார் தன்னுடைய ஒரு ஓவர் இவ்வளவு பெரிய டேமேஜ் தரும் என்று முதல் பந்தில் சிக்ஸர், அடுத்த சிக்ஸர், மூன்றாவது பந்தில் சிக்ஸர், நான்காவது பந்துடாட் ஐந்தாவது மற்றும் ஆறாவது பந்தில் சிக்சர் அதாவது ஒட்டுமொத்தமாக ஒரே ஓவரில் 30 ரன்களை குவித்தார் டென் கிரிஸ்டியன்.

இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமென்றால் ஆஸ்திரேலியா வெற்றி பெறுவதற்கு காரணமாக, ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இந்த அவர்தான் என்று சொல்லப்படுகிறது. இப்படி ஒரே ஓவரில் 30 ரன்களை எடுத்த ஆஸ்திரேலிய அணி 19 ஓவரில் தான் வெற்றி பெற்றது. அதுவும் 7 விக்கெட்டுகளை இழந்து சர்வதேச கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்க வீரர் கிப்ஸ்2007ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் நெதர்லாந்து அணிக்கு எதிராக ஒரே ஓவரில் 6 சிக்சர்களை அடித்தார். அதன் பின்னர் டி20 உலகக் கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிராக ஸ்டூவர்ட் பிராட் ஓவரில் யுவராஜ் சிங் 6 சிக்சர்களை பறக்க விட்டிருக்கிறார். கார்பில்ட் சோபர்ஸ் இவர்களெல்லாம் முன்பாகவே இந்த சாதனையை படைத்திருக்கிறார். அதைத்தவிர வெஸ்ட் இண்டீஸ் அணியின் எல்லாரும் 6 சிக்சர்களை அடித்து இருக்கிறார்.

தற்சமயம் டேனியல் கிறிஸ்டியன் ஒரே ஒரு சிக்ஸரை தவறவிட்டால் அந்த பட்டியலில் இடம் பெறும் வாய்ப்பையும் தவற விட்டிருக்கிறார். இருந்தாலும் பந்துவீச்சாளர் இன் முகமே சோர்ந்து போய் விட்டது. ஆஸ்திரேலியாவிற்கு சென்று அங்கு விளையாடி அங்கே இப்படி சித்தர் அடித்திருந்தால் கூட அவருக்கு மிகப்பெரிய விஷயமாக தெரிந்திருக்காது. எது எப்படியோ வங்கதேச அணி தொடரை வென்று இருக்கிறது அந்த விதத்தில் அனைவருக்கும் சந்தோசம் தான்.