Bank Job: பொறியியல் படிப்பில் பட்டம் பெற்றவர்கள் மற்றும் MCA படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!
தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில்(Tamilnadu Mercantile Bank) காலியாக உள்ள “General Manager” பணிக்கு தகுதி,விருப்பம் இருக்கும் நபர்கள் வருகின்ற மே 19 ஆம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
வேலை வகை: வங்கி வேலை
நிறுவனம்: தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி (Tamilnadu Mercantile Bank)
பணி:
*General Manager
காலிப்பணியிடங்கள்: இப்பணிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித் தகுதி:
இப்பணிக்கு விண்ணப்பம் செய்ய விருப்பம் நபர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரிகளில் இன்ஜினியரிங் படிப்பில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்ச வயது 40 என்றும் அதிகபட்ச வயது 55 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.
மாத ஊதியம்: இப்பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு வங்கி விதியின் படி மாதம் நல்ல ஊதியம் வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை:
*நேர்காணல்(Interview)
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழி
General Manager பணிக்கு தகுதியும்,ஆர்வமும் இருக்கும் விண்ணப்பதாரர்கள் https://www.tmbnet.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தியிட்டு ஆன்லைன் வழியாக அனுப்பிவைக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடைசி தேதி: விண்ணப்பம் செய்ய 19-05-2024 இறுதி நாள் ஆகும்.