நாடு முழுவதும் உள்ள வங்கிகளில் தொழிற்சங்களின் உரிமையை தட்டி பறிக்கும் செயல்பாடுகளில் மத்திய அரசு ஈடுப்படுவதாக கூறியும், பணிகளை அவுட் சோர்ஸ் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் மத்திய அரசை அகில இந்திய வங்கி பணியாளர்கள் சம்மேளனம் நாடு முழுவதும் உள்ள வங்கிகள் இன்று வேலை நிறுத்ததில் ஈடுபட போவதாக அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.
இந்த அறிவிப்பிற்கு நாடு முழுவதும் உள்ள 9 தொழிற்சங்கள் ஆதரவு தெரிவித்தன. இதற்கிடையே இந்திய வங்கி சங்கத்திற்கு தங்களின் பிரச்சனகளை கடிதம் வாயிலாக அகில இந்திய வங்கி பணியாளர்கள் சம்மேளனம் விளக்கியது. இதன்பின், டெல்லியில் நடந்த பேச்சுவார்த்தையில் தொழிலாளர் நல ஆணையர் அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.
தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தையில், உடன்பாடு ஏற்படவே இன்று நடைபெறவிருந்த வேலை நிறுத்தம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அகில இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் அறிவித்துள்ளது.இது குறித்து அகில இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் பொதுசெயலாளர் வெங்கடாசலம் கூறுகையில்,
நடந்த பேச்சு வார்த்தையில் இந்திய வங்கி சங்கத்தினர் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதி அளித்தனர். இதனால், இன்று நடைபெற இருந்த வேலை நிறுத்த போராட்டம் கைவிடப்பட்டதால் பணியாளர்கள் அனைவரும் பணிக்கு செல்ல வற்புறுத்தினார். இதனால், இன்று வங்கிகள் வழக்கம் போல செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.