திவாலா எனக்கா நெவர்! பிரபல விமான சேவை நிறுவனம் அறிவிப்பு!

0
263
#image_title
திவாலா எனக்கா நெவர்! பிரபல விமான சேவை நிறுவனம் அறிவிப்பு.
திவால் ஆகும் நிலைமை எங்களுக்கு வராது. திவால் என்ற பேச்சுக்கே இங்கு இடம் கிடையாது என்று பிரபல விமானசேவை நிறுவனமான ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் அறிவித்துள்ளது.  ஸ்பைஸ்ஜெட் விமானசேவை திவால் ஆனது அல்லது ஆகப் போகிறது என்று பரவும் பொய்யான தகவல்களை அடுத்து ஸ்பைஸ்ஜெட் விமான சேவை நிறுவனத்தின் தலைவர் அஜய்சிங் கூறியுள்ளார்.
அண்மையில் வாடியா குழுமத்தின் கோ பர்ஸ்ட் விமான சேவை நிறுவனம் கடும் நிதி நெருக்கடி காரணமாக திவால் ஆனதாக அறிவித்தது. இதையடுத்து கோ பர்ஸ்ட் நிறுவனத்தின் விமானங்களை வாங்குவதற்கு டாடா நிறுவனமும், இண்டிகோ நிறுவனமும் போட்டி போட்டு கொண்டிருக்கின்றனர். இதையடுத்து ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் தலைவர் அஜய்சிங் அவர்கள் திவால் நோட்டீஸ் அளிக்கும் கேள்விக்கு இங்கு இடமில்லை என்று கூறியுள்ளார்.
இது தொடர்பாக அஜய்சிங் அவர்கள், “நாங்கள் எங்கள் நிறுவனத்தின் விமான சேவையை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளோம். தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள விமான சேவையை மீண்டும் தொடங்குவதற்கு நிறுவனம் செயல்பட்டு வருகின்றது. வழக்கத்தை விட கூடுதல் எண்ணிக்கையில்  விமானங்களை சேவையில் இயக்க திட்டமிட்டுள்ளோம். ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் திவால் அடையும் நடைமுறைகளில் ஈடுபட்டு வருகிறது என்ற ஆதாரமற்ற தகவல்களை நம்ப வேண்டாம். இங்கு திவால் என்ற பேச்சுக்கே இடம் கிடையாது” என்று அஜய் சிங் கூறியுள்ளார்.
Previous articleஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு!! தேதி அறிவித்த பள்ளிக்கல்வித்துறை!!
Next articleசென்னை மெட்ரோவில் வேலை!! மக்களே நம்பாதீர்.. அலார்ட் செய்த நிர்வாகம்!!