கொரோனா தொற்றால் வங்கி மூடப்பட்டது! அதிர்ச்சியில் மக்கள்!

கொரோனா தொற்றால் வங்கி மூடப்பட்டது! அதிர்ச்சியில் மக்கள்!

கொரோனா தொற்றானது போன ஆண்டு சீனாவில் தொடரப்பட்டு படிப்படியாக அனைத்து நாடுகளுக்கும் சென்றது. இந்த கொரோனா தொற்றால் லட்சக்கணக்கான உயிர்களை இழக்க நேரிட்டது.மக்களின் நலன் கருதி அனைத்து நாடுகளும் ஊரடங்கை அறிவித்தது. மக்கள் வேலைவாய்ப்புகள் இன்றி வீட்டினுள்ளே முடங்கி கிடந்தனர். அதனைத்தொடர்ந்து இந்தியாவிலும் மார்ச் மாதத்திலிருந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.இந்த ஊரடங்கானது ஏழு மாதங்களாக தொடர்ந்தது.

நவம்பர் மாதம் முதல் ஊரடங்கு சில தளர்வுகளுடன் முடிவுக்கு வந்தது.அதன்பின் மக்கள் கொரோனா தொற்றை மறந்து தனது பழைய வாழ்க்கையை ஆரம்பித்துவிட்டனர்.மீண்டும் முதலில் ஆரம்பித்து போலவே ஐரோப்பியாவில் கொரோனா 2 வது அலை உருவாக ஆரம்பித்துவிட்டது. அதனைத்தொடர்ந்து சென்ற வருடம் நடந்தது போலவே வெளிநாடுகளில் அதாவது (ஜெர்மனி,பிரான்ஸ்) போன்ற நாடுகளில் ஊரடங்கானது  அமல்படுத்தப்பட்டுள்ளது.

அடுத்ததாக நமது இந்தியாவிலும் ஊரடங்கு அமல்படுத்தப்படும் எனக் கூறி வருகின்றனர். இந்நிலையில் கோவையில் பீளமேட்டில் செயல்பட்டு வரும் சென்டர் பேங்க் ஆப் இந்தியாவில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. எனவே அந்த வங்கி மூடப்பட்டது. கொரோனா தொற்றானது தொற்று காரணமாக வங்கி மூடப்பட்டதாகவும், அதுவரை வாடிக்கையாளர்கள் ஏதேனும் தேவை இருப்பின் அருகில் உள்ள வங்கி கிளைகளை அணுகும் படியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா இரண்டாவது அலை உருவாகுவதாக சுகாதார அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.இந்நிலையில் அனைவரும் கொரோனா தொற்று தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வர வேண்டும் எனவும் கொரோனா விதிமுறைகளை சரியாக பின்பற்ற வேண்டும் எனவும் சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

Leave a Comment