கடனை செலுத்தாதவர்கள் மீது இதுபோல வங்கிகள் செய்ய கூடாது!! நிர்மலா சீதாராமன் அதிரடி உத்தரவு!! 

0
143
Banks should not do this to defaulters!! Nirmala Sitharaman Action Order!!
Banks should not do this to defaulters!! Nirmala Sitharaman Action Order!!

கடனை செலுத்தாதவர்கள் மீது இதுபோல வங்கிகள் செய்ய கூடாது!! நிர்மலா சீதாராமன் அதிரடி உத்தரவு!! 

கடனை செலுத்தாதவர்கள் மீது வங்கிகள் இரக்கமற்ற நடவடிக்கை எடுக்க கூடாது என நிர்மலா சீதாராமன் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.

தற்போது நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் கடந்த 4 நாட்களாக  நடைபெற்று வருகிறது. கடந்த 3 நாட்களிலும் மணிப்பூர் சம்பவமே எதிரொலித்ததால் அவை செயல்பாடுகள் பெரிதும் பாதிக்கப்பட்டது.இதுபற்றி  விவாதிக்க வேண்டும் என எதிர்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. மேலும் அமளியில் எதிர்கட்சிகள் ஈடுபட்டதால் இதன் காரணமாக  இரு அவைகளும் சிறிது நேரம் ஒத்தி வைக்கப்பட்டன.

3 நாள் கூட்டத் தொடரில்  மக்களவையில் நேற்றைய கேள்வி நேரத்தின் போது நாடாளுமன்ற மக்களவையில்   சிறிய அளவில் கடன் பெற்றவர்கள், அதை திருப்பி செலுத்த முடியாதநிலை குறித்து பதில் அளிக்குமாறு  கேள்வி எழுப்பப்பட்டது. அந்த கேள்விக்கு மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் குறுக்கிட்டு கூறியதாவது:- கடனை திருப்பி செலுத்த முடியாதவர்கள் மீது இரக்கமற்ற வகையிலான நடவடிக்கைகளை சில வங்கிகள் எடுப்பதாக புகார்கள் வந்து கொண்டே இருக்கின்றன.

இதன் காரணமாக கடனை திருப்பி செலுத்தாதவர்கள் மீது கடுமையான இரக்கமற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள கூடாது என அரசு வங்கிகள்,மற்றும் அரசு சாரா தனியார் வங்கிகள் என அனைத்திற்கும் மத்திய அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது. மேலும் இந்த பிரச்சனையை மனிதாபிமானத்துடனும், உணர்வுபூர்வமாகவும், அணுக வேண்டும் என கூறியுள்ளார்.

Previous articleTrue caller-ன் புதிய அம்சம்!! இனி பயனாளர்களுக்கு பதிலாக AI பேசும்!!
Next articleபுழல் சிறையில் செல்போன் பயன்படுத்திய கைதிகள்!! பயங்கரவாத அமைப்புகளின் சதி திட்டம்!!