பேனர் விவகாரம் எல்லாம் அதிமுகவிற்கு தான் திமுகவுக்கு கிடையாது! அலங்கார வளைவு விழும் அதிர்ச்சி வீடியோ

0
205

பேனர் விவகாரம் எல்லாம் அதிமுகவிற்கு தான் திமுகவுக்கு கிடையாது! அலங்கார வளைவு விழும் அதிர்ச்சி வீடியோ

சென்னை பள்ளிக்கரணையில் அதிமுக பிரமுகர் ஜெயகோபால் தனது மகன்‌ திருமணத்திற்காக அதிமுகவினரை வரவேற்று வைத்திருந்த பேனர் விழுந்ததால் ஸ்கூட்டியில் சென்ற இளம்பெண் சுபஸ்ரீ நிலைதடுமாறி சாலையில் விழும்போது பின்னால் வந்த லாரி அவர் மீது ஏறியது, இதில் சம்பவ இடத்திலேயே அவர் உடல் நசுங்கி உயிரிழந்தார்,

இது சம்பவம் தமிழகத்தை உலுக்கியது பேனருக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்தது தமிழக அரசு, உயர்நீதிமன்றமும் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து பேனர் விவகாரத்தில் தமிழக அரசு கடுமையான விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

சுபஸ்ரீ சம்பவத்திற்கு தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் வருத்தம் தெரிவித்தனர் மேலும் பேனர் விவகாரத்தில் அதிமுகவை கடுமையாக விமர்சனம் செய்து வந்தனர், இதற்கு அதிமுக தான் காரணம் என்றும் கடுமையாக பேசி வந்தனர்,

இதனால் அதிமுக தலைமை இனிமேல் யாரையும் வரவேற்று பேனர்கள் வைக்க வேண்டாம் என்று தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் இனி திமுகவினரை வரவேற்று யாரும் பேனர் வைக்க வேண்டாம் மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று‌ அறிக்கை வெளியிட்டார்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் விக்ரவாண்டி இடைத்தேர்தலில் திமுகவினரை வரவேற்று வைக்கப்பட்டிருந்த அலங்கார வளைவு நடுரோட்டில் விழும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட துறையூர் வழுதாவூர் சாலையில் திமுக சார்பில் அலங்கார வரவேற்பு வளைவு வைக்கப்பட்டிருந்தது.

இந்த அலங்கார வளைவு சரிந்து விழும் காட்சிகள் தற்போது வைரலாக பரவி வருகின்றன. அலங்கார வளைவு சரியும் போது, ஒரு கார் அதனை கடந்திருக்கும். சில நொடிகள் தாமதித்திருந்தால் கார் மீது அலங்கார வளைவு விழுந்து பெரிய விபத்தாக மாறியிருக்கும். தமிழகத்தில் இது மிகப்பெரிய விவாதப் பொருளாக மாறி இருக்கும் மு க ஸ்டாலின் இதனை எப்படி எதிர்கொள்ளப் போகிறார் என்று தெரியவில்லை,

வீடியோ கீழே

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.

Previous articleதிமுகவின் இடப்பிரச்சனை இராமதாஸ் மூலம் தீர்வு கிடைக்கட்டும்! விசிகவை தொடங்கிய தடா பெரியசாமி அதிரடி
Next articleஇலங்கை அருகே காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதால் மேலும் 2 நாட்களுக்கு தமிழகத்தில் மழை நீடிக்கும்