தொடர்ந்து 29 நாட்கள் அமலில் இருக்கும் தடைகள்! மீறினால் கடும் நடவடிக்கை!

Photo of author

By Parthipan K

தொடர்ந்து 29 நாட்கள் அமலில் இருக்கும் தடைகள்! மீறினால் கடும் நடவடிக்கை!

ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினவிழா கொண்டாடப்படவுள்ளது.ஆண்டுதோறும் டெல்லியில் பிரமாண்ட அணிவகுப்புடன் கோலாகலமாக கொண்டாப்படும்.அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தும் தற்போது செய்யப்பட்டு வருகின்றது.குடியரசு தினவிழா கொண்டாட்டத்திற்கு டெல்லி போலீஸ் கமிஷனர் சஞ்சய் அரோரா உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.

அந்த உத்தரவில் டெல்லியில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. குடியரசு தின கொண்டாட்டத்தை சீர்குலைக்க சமூக விரோத சக்திகளும்,பயங்கரவாதிகள் இந்தியாவுக்கு எதிரானவர்களும் ட்ரோன்கள், ஆளில்லாத குட்டி விமானங்கள் ஆகியவற்றை பறக்கவிட்டு பொதுமக்களுக்கும், தலைவர்களுக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

அதன் காரணமாக டெல்லி வான்பகுதியில் ட்ரோன்கள் , பாராகிளைடர்கள், ஆளில்லாத குட்டி விமானங்கள், பாரா மோட்டர்கள், ஏர் பலூன்கள் ஆகியவற்றை பறக்கவிட தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 18 ஆம் தேதி முதலே இந்த உத்தரவு அமலுக்கு வந்துள்ளது.அடுத்த மாதம் பிப்ரவரி 15 ஆம் தேதி மொத்தம் 29 நாட்கள் இந்த தடை அமலில் இருக்கும்.மேலும் இந்த தடையை மீறி யாராவது இந்த பொருட்களை பறக்கவிட்டால் இந்திய தண்டனை சட்டத்தின் 188 வது பிரிவின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் குடியரசு தின அணிவகுப்பில் முழுவதுமாக இந்திய தயாரிப்பு ஆயுதங்கள் பயன்படுத்தப்பட உள்ளது. 21 குண்டுக்கல் முழங்க பழமையான 25 பவுண்டர்கள் பீரங்கிகள் பயன்படுத்தப்பட்டு வந்தன.இந்த ஆண்டு குடியரசு தின அணிவகுப்பில் இந்திய தயாரிப்பான 105 எம்.எம் ரக பீரங்கிகள் பயன்படுத்தப்படுகின்றது.