“பரந்தூர் ஏர்போர்ட்” விஜய்-யின் மாஸ் நடவடிக்கை.. அவசர அவசராம தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

Photo of author

By Rupa

TVK DMK: பரந்தூர் விமான நிலையம் அமைப்பது குறித்து தமிழக அரசு விஜய் உரைக்கு பிறகு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கு எதிராக மக்கள் தொடர் 900 நாட்களுக்கு மேலாக போராடி வருகின்றனர். ஆனால் தமிழக அரசு இது குறித்து செவி சாய்க்கவில்லை. இதனிடையே போராட்டக்காரர்களை சந்தித்து ஆதரவு தெரிவிக்கும் வகையில் நேற்று முன்தினம் விஜய் குரல் கொடுத்தார். இதற்கு முன்னதாகவே அவர் திடல் குறித்து அனுமதி கேட்ட பொழுது வழங்கவில்லை ஏன் ஊருக்குள்ளேயே விடாமல் வேறு ஒரு பகுதியில் மகளுடனான சந்திப்பிற்கு ஒரு மணி நேரம் மட்டுமே அனுமதி அளித்திருந்தனர்.

விக்கிரவாண்டி மாநாட்டின் மூலம் இணையத்தளம் எனத் தொடங்கி அனைத்து பக்கமும் இவரது பேச்சாகத் இருந்தது. அதன் தாக்கமும் மக்கள் மத்தியில் உருவாக ஆரம்பித்து விட்டது. அதற்கு இடம் கொடுக்கக் கூடாது என்பதற்காகவே ஆளும் கட்சி காவல் துறையின் உந்துதலோடு இப்படிப்பட்ட விதிமுறைகளை விதித்தனர். இது குறித்து விஜய் பேசுகையில் சுட்டி காட்டியதும் குறிப்பிடத்தக்கது.

இப்படி இருக்கும் பொழுது விஜய் பரந்தூர் விமான நிலையம் வைப்பதற்கு எதிராக போராட்ட களத்தை சந்தித்த பிறகு மீண்டும் தமிழக அரசு அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பாக மக்களுக்கு பாதிக்காதவாறு விமான நிலையம் அமைப்பு செயல்படுத்தப்படும் என தெரிவித்துள்ளனர். இவ்வளவு நாட்கள் வாய்திறக்காத தமிழக அரசு விஜய் போராட்ட களம் கண்டதும் உடனடியாக அறிக்கை விட்டுள்ளனர். இது அவர் அரசியல் பாதையின் முதல் வெற்றி எனக் கூறுகின்றனர்.