நம் வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்வதை போல் பயன்படுத்தும் கழிவறையையும் க்ளீனாக வைத்துக் கொள்ள வேண்டும்.கழிவறையில் உள்ள கறைகள்,அழுக்கு கிருமிகள் நீங்கி பளிச்சிட இங்கு சொல்லப்பட்டுள்ள டிப்ஸில் ஒன்றை முயற்சி செய்யுங்கள்.
டிப்ஸ் 01:
1)கோலமாவு – ஒரு கைப்பிடி
2)சோடா உப்பு – கால் கைப்பிடி
முதலில் ஒரு பக்கெட்டில் தண்ணீர் நிரப்பி இரண்டு தேக்கரண்டி வாஷிங் பவுடர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.
இதை பாத்ரூம் முழுவதும் ஊற்றி 20 நிமிடங்களுக்கு ஊறவிடுங்கள்.பிறகு ஒரு கிண்ணத்தில் ஒரு கைப்பிடி கோலமாவு மற்றும் கால் கைப்பிடி சோடா உப்பு சேர்த்து கலந்து விடுங்கள்.
இதை பாத்ரூம் முழுவதும் பரவலாக தூவிவிடுங்கள்.அரை மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் பாத்ரூமை க்ளீன் செய்யுங்கள்.இவ்வாறு செய்தால் பாத்ரூம் கறைகள் அனைத்தும் நீங்கிவிடும்.
டிப்ஸ் 02:
1)கல் உப்பு – ஒரு கைப்பிடி அளவு
2)எலுமிச்சை சாறு – கால் கப்
ஒரு அகலமான பக்கெட்டில் ஒரு கைப்பிடி கல் உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள்.பிறகு இரண்டு எலுமிச்சம் பழத்தை நறுக்கி அதன் சாற்றை கல் உப்பில் பிழிந்துவிடுங்கள்.
பிறகு பக்கெட் முழுவதும் வெதுவெதுப்பான தண்ணீர் ஊற்றி நன்கு கலந்து விடுங்கள்.இந்த நீரை பாத்ரூமில் ஊற்றி ஒரு மணி நேரம் ஊறவிடுங்கள்.
பிறகு பிரஸ் கொண்டு பாத்ரூமை தேய்த்து கழுவினால் கறைகள்,அழுக்கு கிருமிகள் அனைத்தும் நீங்கிவிடும்.
டிப்ஸ் 03:
1)பேக்கிங் சோடா – ஒரு பாக்கெட்
2)வாஷிங் பவுடர் – கால் கப்
பிளாஸ்டிக் பக்கெட்டில் ஒரு பாக்கெட் பேக்கிங் சோடா கொட்டிக் கொள்ளுங்கள்.பிறகு அதில் கால் கப் அளவிற்கு வாஷிங் பவுடர் சேர்த்து நன்கு கலந்து விடுங்கள்.
பிறகு அதில் தண்ணீர் ஊற்றி நன்கு கலந்து பாத்ரூமில் ஊற்றி சிறிது நேரம் ஊறவிடுங்கள்.பிறகு பிரஸில் தேய்த்து பாத்ரூமை சுத்தப்படுத்துங்கள்.அதேபோல் வினிகர் பயன்படுத்தியும் பாத்ரூமை சுத்தப்படுத்தலாம்.