சகோதரியுடன் பாஜகவில் இணைந்த சாய்னா நேவல்:

Photo of author

By CineDesk

சகோதரியுடன் பாஜகவில் இணைந்த சாய்னா நேவல்:

CineDesk

பிரபல பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் தனது சகோதரியுடன் இன்று பாஜகவில் இணைந்தார். அவருக்கு பாஜகவின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்

கடந்த சில வருடங்களாகவே கிரிக்கெட் வீரர்கள் உள்பட பல விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் அரசியல் கட்சிகளில் இணைந்து வருகின்றனர். முகமது அசாருதீன், கௌதம் காம்பீர், சித்து உள்பட பலர் அரசியல் கட்சிகளில் இணைந்து அரசியல் செய்து வரும் நிலையில் தற்போது அந்த வரிசையில் சாய்னா நேவால் இணைந்துள்ளார்

சற்று முன்னர் பாஜக தேசிய செயலாளர் அர்ஜூன்சிங் முன்னிலையில் தன்னை பாஜகவில் இணைத்துக்கொண்ட சாய்னா நேவல், பாஜகவின் உறுப்பினர் அட்டையும் பெற்றுக் கொண்டார். சாய்னாவை அடுத்து அவரது சகோதரியும் பாஜகவில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

பாஜகவில் இணைந்துள்ள சாய்னா நேவாலுக்கு விரைவில் முக்கிய பதவி ஒன்று அளிக்கப்படும் என பாஜக வட்டாரங்கள் கூறுகின்றன அவர் தேர்தலில் போட்டியிட்டு எம்எல்ஏ அல்லது எம்பி ஆவாரா? அல்லது மாநிலங்களவை உறுப்பினர் பதவி அவருக்கு கொடுக்கப்படுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்