மனவளர்ச்சி குன்றியோர் காப்பகத்தில் நடைபெற்ற கொடூரம்! காவல்துறையினர் தீவிர விசாரணை!

Photo of author

By Sakthi

பட்டுக்கோட்டை அருகில் ஒரு காப்பகம் ஒன்றில் சிறுவன் ஒருவனை அடித்து கொன்றதாக எழுப்பப்பட்ட புகாரின் அடிப்படையில் நேற்றையதினம் அதிகாரிகள் பொக்லைன் இயந்திரம் மூலமாக தோண்டி பார்த்த சமயத்தில் எலும்புக்கூடு ஒன்று கண்டெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகில் அதிராம்பட்டினம் எரிப்பறக்கரை என்ற இடத்தில் அவிஸோ மன வளர்ச்சி குன்றியோர் காப்பகம் இருக்கிறது.

இந்த மனவளர்ச்சி குன்றியோர் காப்பகத்தில் இருபதிற்கும் அதிகமான மன வளர்ச்சி இல்லாத குழந்தைகள் தங்கியிருக்கிறார்கள். இந்த காப்பகத்தை முகமது ஷேக் அப்துல்லா என்பவர் நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது. இந்த சூழ்நிலையில், அந்த காப்பகத்தில் சென்ற சில மாதங்களுக்கு முன்னர் 15 வயதுடைய சிறுவன் ஒருவனை முகமது ஷேக் அப்துல்லா ஆத்திரத்தில் அடித்த சமயத்தில் அந்த சிறுவன் உயிரிழந்ததால் காப்பகத்தின் உள்ளேயே யாருக்கும் தெரியாமல் குழிதோண்டி புதைத்து விட்டதாகவும் மொழி தெரியாமல் வந்த பெண் ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தி அதில் அந்த பெண்ணும் உயிரிழந்ததாகவும் ஷேக் அப்துல்லாவின் மனைவி அலிமா பீவி தமிழக முதலமைச்சர் மற்றும் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்து இருக்கின்றார்.

இந்த சூழ்நிலையில், பட்டுக்கோட்டை காவல் துணை கண்காணிப்பாளர் புகழேந்தி கணேஷ், வட்டாட்சியர் மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் நடராஜன் வருவாய் துறையினர் ஆகியோர் முன்னிலையில் நேற்றைய தினம் அந்த காப்பகத்தின் ஜேசிபி இயந்திரம் மூலமாக தோண்டிப்பார்த்தனர்.

அதாவது அப்துல்லாவின் மனைவி கலிமா பிவி காட்டிய பகுதியில் தோன்றிய சமயத்தில் அந்த பகுதியில் எலும்புக்கூடு மண்டை ஓடு போன்றவை கண்டெடுக்கப்பட்டன இதனை அடுத்து எலும்புக்கூட்டை அதிகாரிகள் சுகாதாரத்துறை மருத்துவர்களிடம் சோதனைக்காக ஒப்படைத்திருக்கிறார்கள். அதோடு காவல்துறையினர் முகமது ஷேக் அப்துல்லா மற்றும் அந்த காப்பகத்தின் இருக்கும் மற்றவர்களிடமும் தொடர்ச்சியாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.