இந்திய அணி கிரிக்கெட் விளையாட அனுமதி! ஐசிசி அறிவிப்புக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு!!

Photo of author

By Parthipan K

தற்பொழுது உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தோற்று பேரழிவை ஏற்படுத்தி கொண்டிருக்கும் நிலையில் பல உயிரிழப்புகளும் நடந்தவண்ணம் உள்ளது. இதன் காரணமாக கடந்த மார்ச் மாதம் நடைபெறவிருந்த சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் எதுவும் நடைபெற வில்லை.

ஐபிஎல் போட்டியும் காலவரையின்றி தள்ளிவைக்கப்பட்டது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கிரிக்கெட் போட்டி எதுவும் நடைபெறாத நிலையில் ஐசிசி வாரிய அட்டவணையின்படி இந்திய கிரிக்கெட் அணி வரும் ஜூலை மாதத்தில் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருந்தது.

அதில் மூன்று ஒருநாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டியில் விளையாட இருந்தது ஆனால் கொரோனா தொற்று காரணமாக காலவரையின்றி அனைத்து போட்டிகளையும் தள்ளி வைத்தது கொரோனா தாக்கம் இன்னும் கட்டுக்குள் வராததால் இலங்கைப் பயணம் குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் இன்னும் இறுதி முடிவு எடுக்காமலேயே இருந்து வந்தது.

இதற்கிடையில் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு இலங்கை கிரிக்கெட் வாரியம் சார்பில் எழுதப்பட்ட கடிதத்தில் தனிமைப்படுத்துதல் வழிமுறைகள் உட்பட அனைத்து பாதுகாப்பு நடைமுறைகளை கடைபிடிக்கவும் ரசிகர்கள் இன்று பூட்டியே ஆடுகளத்தில் போட்டி தொடரை நடத்தவும் தயாராக இருக்கிறோம் என இலங்கை கிரிக்கெட் வாரியம் அதில் கூறியுள்ளது. ஆகையால் இந்திய கிரிக்கெட் அணி ஜூலை மாதம் இறுதியில் இலங்கை வந்து ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டி தொடரில் விளையாட வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

இந்தநிலையில் இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் கோரிக்கைக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் சாதகமாக பதிலை அளித்துள்ளது மத்திய அரசு இந்திய அணி கிரிக்கெட் விளையாட அனுமதித்தால் இலங்கை சென்று விளையாட முழு சம்மதத்தை தெரிவித்துள்ளது. இதற்கு மத்திய அரசின் பதில் என்னவென்று தெரிந்து கொள்ள ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக உள்ளனர்.