இனி வீரர்களைக் கடன் வாங்கிக் கொள்ளலாம்: பிசிசிஐ புதிய விதிமுறை !

0
121

இனி வீரர்களைக் கடன் வாங்கிக் கொள்ளலாம்: பிசிசிஐ புதிய விதிமுறை !

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அணிகள் தங்களுக்கு தேவையான வீரர்களை பாதி போட்டிகள் முடிந்த நிலையில் வீரர்களை மாற்றிக் கொள்ளலாம் என புதிய முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.

2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐபிஎல் போட்டிகள் பணம் கொழிக்கும் விளையாட்டாக மாறி வருகின்றன. இதனால் மற்ற நாட்டு வீரர்கள் கூட ஐபிஎல் ல் விளையாடுவதிலேயே ஆர்வமாக உள்ளனர். இதனால் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் எந்த நாட்டு வாரியங்களும் எந்த தொடர்களையும் அமைத்துக் கொள்வதில்லை.

இந்நிலையில் பிசிசிஐ தலைவராக கங்குலி நியமிக்கப்பட்ட பின் 2020 ஆம்  ஆண்டு ஐபிஎல் தொடர் முதல் முறையாக நடக்க இருக்கிறது. இதுவே அவரின் கடைசி தொடராகவும் இருக்கும் என்பதால் இந்த ஆண்டு அவருக்கு சிறப்பான ஆண்டாக அமைந்துள்ளது. இந்த ஆண்டு மார்ச் 29 ஆம் தேதி ஐபிஎல் போட்டிகள் மும்பையில் சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு இடையில் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உலக அளவில் அதிக பணம் கொழிக்கும் லீக் தொடராக ஐபிஎல் இருப்பதால் வீரர்கள் அனைவரும் இந்த தொடரில் விளையாட மிகவும் ஆர்வமாக உள்ளனர். அதனால் ரசிகர்களுக்கு புதுமையாக ஏதாவது கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும்  என பிசிசிஐ நிர்வாகம் புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்திக் கொண்டே உள்ளது. இந்நிலையில் இப்போது அணிகள் தங்கள் பாதி போட்டிகள் முடிந்த நிலையில் வேறு அணிகளுடன் வீரர்களைப் பரிமாறிக் கொள்ளலாம் என அறிவித்துள்ளது. இதன் மூலம் அணியில் விளையாடாமல் பென்ச்சில் இருக்கும் வீரர்களுக்கு அதிக வாய்ப்பு கிடைக்கும் என சொல்லப்படுகிறது. இந்த முறை கால்பந்து தொடர்களில் பயன்படுத்தப் பட்ட ஒன்று.

Previous articleஇதுதான் இன்றைய தமிழ் சினிமாவின் நிலை : தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு கடிதம்!
Next articleசமயம் பார்த்து திமுக வின் குடுமியை பிடிக்கிறது பாஜக : 2G வழக்கு மேல்முறையீடு