இந்திய நியூசிலாந்து போட்டியின் தோல்விக்கு இந்திய அணி ஆஸ்திரேலியா அன்யுசன்விலையாட உள்ள நிலையில் தலைமை பயிசியாளராக உள்ள கம்பீர் சிகப்பு பந்து போட்டியில் இருந்து நீக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகி வருகிறது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நியூசிலாந்து அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இந்த தொடரில் 12 ஆண்டுகளாக சொந்த மண்ணில் அடையாத படு தோல்வியை தழுவியது. இந்திய அணி மூன்று போட்டிகளில் ஒரு போட்டியில் கூட வெற்றி பெறவில்லை. ஒயிட் வாஷ் தோல்வியை தழுவியது இந்திய அணி.
இந்த தோல்விக்கு பின் கம்பீர் மற்றும் ரோஹித் இருவருக்கும் பலவிதமான விமர்சனங்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கம்பீர் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்ற பின் இதுவரை தோல்வியடையாத இலங்கை அணியிடம் தோல்வியடைந்தது. அதன் பின் தற்போது நியூசிலாந்து அணியிடம் மோசமான தோல்வியை தழுவியுள்ளது.
இந்நிலையில் இவருக்கு இந்தியா ஆஸ்திரேலியா தொடரில் கடைசி வாய்ப்பு அளிக்க உள்ளது.இந்த தொடரில் தோல்வியடைந்தால் சிகப்பு பந்து போட்டிகளில் இருந்து இவர் நீக்கப்பட்டு இவருக்கு பதிலாக விவிஎஸ் லக்ஷ்மன் பயிற்சியாளராக நியமிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கம்பீர் வெள்ளை பந்து போட்டிகளில் மட்டும் தலைமை பயிற்சியாளராக இருப்பார் என்றும் கூறப்படுகிறது.