தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 530க்கும் மேற்பட்ட கல்வி பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றது.இதில் பிஇ, பிபேக் படிப்புகளுக்கு சுமார் இரண்டரை லட்சம் பேர் மாணவர்களுக்கு கலந்தாய்வின் மூலம் தடுக்க முடியும். கொரோனா காரணமாக பள்ளி கல்லூரிகள் மூடப்பட்ட நிலையில் ,இந்த ஆண்டிற்கான பொறியியல் படிப்பிற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க ஞாயிற்றுக் கிழமையான நேற்று கடைசி நாளாக இருந்தது.நேற்று மாலையுடன் விண்ணப்பிக்கும் முறை முடிந்தது.
கடந்த ஜூலை 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் நடைபெற்ற பொறியியல் கலந்தாய்வில் சுமார் ஒன்றரை லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.கடந்த ஆண்டு பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பித்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 33 ஆயிரத்து116 ஆக இருந்த நிலையில் இந்த ஆண்டு அதிகமாக காணப்படுகிறது.
விண்ணப்பித்த மாணவர்கள் தங்களது சான்றிதழ்களை ஆகஸ்ட் 20ஆம் தேதிக்குள் இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்ற கல்வித்துறை கூறியுள்ளது.ஆகஸ்ட் 21-ஆம் தேதி சமவாய்ப்பு எண் வழங்கப்பட்ட கலந்தாய்வு நடைபெறும் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.