தமிழக மக்களுக்கு முக்கிய வேண்டுகோள் விடுத்த ஆளுநர்!

Photo of author

By Sakthi

கடந்த நான்கு மாத காலமாக வெகுவாக குறைந்து வந்த கொரோனா தற்சமயம் வேகமெடுக்க தொடங்கியிருக்கிறது.இதனால் தமிழகம் முழுவதும் ஒருவித பீதி நிலவி வருகிறது..அரசின் சார்பாக பல தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

இது நிலையில் இது தொடர்பாக கவர்னர் பன்வாரிலால் புரோகித் வெளியிட்டிருக்கின்ற அறிக்கை ஒன்றில் தெரிவித்திருப்பதாவது கொரோனா காரணமாக, இந்தியா தற்சமயம் இந்தியா மாபெரும் சுகாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. ஆகவே நாட்டு மக்கள் எல்லோரும் தங்களுடைய குடும்பத்தை மிக கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும் அதிலும் முக்கியமாக அவரவர் இல்லங்களில் இருக்கின்ற மூத்த குடிமக்களை பத்திரமாக பார்த்துக்கொள்ள வேண்டும், அதே போல எல்லோரும் முகக்கவசம் அணியவேண்டும், என தெரிவித்திருக்கிறார்.

இந்த நோய் தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள தடுப்பூசி போட்டுக்கொள்ள தகுதி உள்ள நபர்கள் தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும் என தெரிவித்திருக்கிறார்.
அதேபோல இந்த நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு வழங்கிய அறிவுறுத்தல்கள் மற்றும் கட்டுப்பாடுகளை எல்லோரும் நிச்சயமாக பின்பற்ற வேண்டும் அதேபோல இந்த தொற்றுக்கு எதிராக எல்லோரும் ஒன்றாக இணைந்து போராட வேண்டும் என்று அறிக்கையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.