500 ரூபாய் நோட்டை வாங்கும் பொழுது கவனமாக இருங்கள்:!! காவல்துறையினர் எச்சரிக்கை!

Photo of author

By Pavithra

500 ரூபாய் நோட்டை வாங்கும் பொழுது கவனமாக இருங்கள்:!! காவல்துறையினர் எச்சரிக்கை!

Pavithra

500 ரூபாய் நோட்டை வாங்கும் பொழுது கவனமாக இருங்கள்:!! காவல்துறையினர் எச்சரிக்கை!

வேலூர் அருகே சென்னை தேசிய நெடுஞ்சாலையில் காரில் வந்த மர்ம கும்பல் ஒன்று 500 ரூபாய் நோட்டு கட்டுகளை கொட்டி சென்றனர்.காற்றில் பறந்த இந்த நோட்டுகளை மக்கள் போட்டி போட்டுக் கொண்டு எடுத்துச் சென்றனர்.

இந்த தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று அந்த 500 ரூபாய் நோட்டுகளை சோதித்துப் பார்த்தபோது அனைத்தும் கள்ள நோட்டுகள் என்று தெரியவந்தது.மேலும் மக்கள் எடுத்துச் சென்றது தவிர்த்து இதன் மதிப்பு 14.50 லட்சம் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக 500 ரூபாய் கள்ள நோட்டுகள் புழக்கத்தில் இருக்க வாய்ப்பு அதிகம் இருப்பதாக காவல் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
எனவே 500 ரூபாய் நோட்டை மாற்றும்பொழுதோ அல்லது வாங்கும் பொழுதோ கவனித்து பார்த்து வாங்க வேண்டுமென்று காவல்துறையினர் கூறியுள்ளனர்.மேலும் அந்த மர்ம கும்பல் யார் என்று காவல் துறையினரால் தீவிரமாக தேடப்பட்டு வருகிறது.