பி.ஈ. படித்தவர்கள் விண்ணப்பித்த வேலை: வேலையில்லா திண்டாட்டத்தின் கொடுமை!

0
126

வாகனம் நிறுத்தும் உதவியாளர் பணிக்கு பொறியியல் படித்தவர்கள் விண்ணப்பித்துள்ளது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது

சென்னையில் அண்ணா நகர், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட ஒரு சில இடங்களில் புதிய வாகன நிறுத்துமிடம் நிறுவப்பட்டுள்ளது. இதற்கு உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. இந்த நிலையில் இந்த பணிக்கு விண்ணப்பித்தவர்கள் 70% பேர் பட்டப்படிப்பு முடித்தவர்கள் என்றும் அதில் 50 சதவீதம் பேர் பி.ஈ. முடித்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது

பி.ஈ. முடித்தவர்கள் சாதாரண வாகன நிறுத்தம் உதவியாளர் பணிக்கு விண்ணப்பித்துள்ளது வேலையில்லாத் திண்டாட்டத்தில் கொடுமையை காட்டுவதாக மாநகராட்சி ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளார். பத்தாம் வகுப்பு மட்டுமே தகுதியான வேலைக்கு பி.ஈ. படித்தவர்கள் விண்ணப்பிப்பது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. ஏற்கனவே மாநகராட்சி குப்பை வண்டியை இயக்கும் ஓட்டுனர் பதவிக்கு ஆயிரக்கணக்கான பொறியியல் மற்றும் எம்.பி.ஏ பட்டதாரிகள் விண்ணப்பித்தனர் என்பது தெரிந்ததே. சாதாரண வேலையாக இருந்தாலும் அரசு வேலை, பணி நிரந்தரம், கைநிறைய சம்பளம், மேலதிகாரி தொல்லை இல்லை, டார்கெட் இல்லை, சரியான நேரத்திற்கு அலுவலகம் செல்ல வேண்டும் என்ற கட்டுப்பாடு இல்லை என்பதே இதற்கு காரணம் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.

Previous articleகண்ணில் கருமை நிற போட்டதால் பார்வை இழந்த பாடகி: அதிர்ச்சி தகவல்
Next articleஉயரம் சிறுசு… உள்ளம் பெருசு..! ரூ 3.40 கோடியை தொண்டு நிறுவனத்திற்கு வழங்கும் வள்ளல் குவாடன்..!!