பள்ளிகளை திறக்க விரைந்து உத்தரவு அளிக்க வேண்டும்! நீதிமன்றத்திற்கு மனு கொடுத்த மாணவியின் விபரீத செயல்!

Photo of author

By Hasini

பள்ளிகளை திறக்க விரைந்து உத்தரவிட வேண்டும்! நீதிமன்றத்திற்கு மனு கொடுத்த மாணவியின் விபரீத செயல்!

பள்ளிகளை விரைவாக திறக்க கோரி மத்திய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் உத்தரவிட வேண்டும் எனக் கூறி பன்னிரண்டாம் வகுப்பு மாணவி ஒரு மனுவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதலே நாட்டில் கொரோனா வைரஸ் பரவியதைத் தொடர்ந்து, அப்போது இருந்தே அனைத்து பள்ளிகளும் கடந்த ஒன்றரை வருடங்களாக நாடு முழுவதிலும் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.

நடுவில் சில மாநிலங்களில் மட்டும் 10 மற்றும் 12ஆம் வகுப்புகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடை பெற்றது. ஆனால் மாணவர்கள் சிலர் நோய்த்தொற்றின் காரணமாக பாதிக்கப்பட்ட தால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து மாவட்டங்களிலும் பள்ளிகள் மூடப்பட்டன. இதனால் கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் சிபிஎஸ்இ வகுப்புகளில்10, 12ஆம் வகுப்பு தேர்வுகள் நடக்காமலேயே மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக எல்லா மாநிலங்களிலும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

மத்திய அரசின் அறிவிப்பை தொடர்ந்து பல மாநிலங்களிலும் இதையே கடைப்பிடித்தனர். இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக வீட்டிலேயே ஆன்லைன் வகுப்புகள் படித்து முடங்கி இருக்கும் மாணவ, மாணவிகள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். பெற்றோர்களுமே இந்த காரணத்தினால் பெரும் மன உளைச்சலில் இருக்கிறார்கள் என்பதே உண்மை. இந்த சூழலில் டெல்லியை சேர்ந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவி ஒருவர் வழக்கறிஞர் அமர் பிரேம் பிரகாஷ் என்பவர் மூலம் பொதுநல மனு ஒன்றை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

அதில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளிகள் மூடி இருப்பதால் மாணவர்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். வறுமை நிலையில் இருக்கும் குடும்பத்தைச் சேர்ந்த பல குழந்தைகளுக்கு ஆன்லைன் வகுப்பிற்கு தேவையான கட்டமைப்பு வசதிகள் கூட இல்லை. இதன் காரணமாக குழந்தைகள் கல்வி என்ற அடிப்படை உரிமை கூட பல குடும்பங்களில் மறுக்கப்படுகிறது.

ஏற்கனவே வறுமையில் வாடிய ஏழைக் குடும்பங்களை சேர்ந்த குழந்தைகள் ஆன்லைன் வகுப்புகளையும் பார்க்கவும் முடியாமல் பள்ளிக்கும் செல்ல முடியாமல் குழந்தை தொழிலாளர்களாக வேலைக்குச் செல்லும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. ஏழை குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகளால் தனி கட்டணம் செலுத்தி தனி டியூஷன்களை நாட முடியாது.

அதே போல் ஆன்லைன் வகுப்புக்கும் பள்ளியின் கட்டணங்கள் செலுத்த வேண்டி உள்ளதால் இதற்கென தனி நிதி அவர்களால் ஒதுக்க முடிவதில்லை. அதன் காரணமாக பள்ளிகளை விரைவாக திறந்து மாணவர்கள் நேரடியாக வகுப்புகளுக்கு செல்ல மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் உத்தரவு அல்லது வழிகாட்டுதலோ வகுக்க வேண்டும். இன்னும் காலம் தாழ்த்தாமல் முழுமையான விரைவான முடிவை எடுக்க வேண்டும் என்றும், இது நாடு முழுவதும் உள்ள மாணவர்களின் மனநிலை குறித்த விவகாரம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.