மிகவும் எச்சரிக்கை! முட்டையை இதில் வைத்து பயன்படுத்தினால் உயிருக்கே ஆபத்து!!

0
170

மிகவும் எச்சரிக்கை! முட்டையை இதில் வைத்து பயன்படுத்தினால் உயிருக்கே ஆபத்து!!

சமீபகாலமாக முட்டையை நாம் குளிர்சாதன பெட்டியில் வைத்து பயன்படுத்தும் வழக்கத்தினை கொண்டுள்ளோம்.இதன் தீமைகளை அறியாமலேயே நாம் வாங்கும் முட்டையை மாத கணக்கில் வைத்துக் கூட பயன்படுத்துகிறோம்.ஆனால் முட்டையை இது போன்று குளிர்சாதன பெட்டியில் வைத்தால் நாம் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.அதைப்பற்றி இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம்.

முதலில் நம் முட்டையை குளிர்சாதன பெட்டியில் வைத்தால் நிறைய நாட்கள் கெடாமல் இருக்கும் என்பது பலரின் நம்பிக்கை.ஆனால் இது முற்றிலும் பொய்.முட்டையை அரை வெப்பநிலையில் வைத்தால் தான் வெகு நாட்கள் கெடாமல் இருக்கும்.
குளிர்சாதன பெட்டியில் வைத்தால் பாலை போன்று திரிந்து விரைவில் கெட்டுவிடும்.

முட்டையை அரை வெப்பநிலையில் வைப்பதை தவிர்த்து குளிர்சாதன பெட்டியில் வைத்தால் அதில் சால்மோனெல்லா என்னும் கொடியவகை பாக்டீரியா வளர மிக அதிக வாய்ப்பு இருக்கிறது.

இந்த சாலமோனெல்லா பாக்டீரியா அதிக வெப்பநிலையை தாங்க கூடியது.நீங்கள் குளிர்சாதன பெட்டியில் வைத்த முட்டையை நன்றாக வேக வைக்காமல் ஆப் பாயில் அல்லது ஆம்லெட் போன்ற குறைந்த வெப்ப நிலையில் வேக வைத்து சாப்பிட்டால் இந்த சால்மோனெல்லா என்னும் பாக்டீரியா நம் உடலில் செல்ல அதிக வாய்ப்புண்டு.

இந்த பாக்டீரியா நம் உடலுக்குள் சென்று விட்டால் வாந்தி, வயிற்றுப்போக்கு மற்றும் தீவிர புட் பாய்சன் போன்ற பிரச்சனைகள் மற்றும் சில நேரங்களில் இதன் அதிக இனப்பெருக்க மற்றும் வீரியத்தால் நம் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலமே முற்றிலும் பாதிக்கப்பட்டு உயிர் இழக்கும் ஆபத்து கூட நேரிடலாம்.

எனவே முட்டையை வேகவைத்து சாப்பிடுவது மிகவும் நல்லது.ஆம்லெட் ஆப் பாயில் போன்ற குறைந்த வெப்ப நிலையில் வேகவைக்கும் முட்டையை அதிக அளவில் சாப்பிடுவது தவிர்ப்பது நம் உடலுக்கு மிகவும் நல்லது.மேலும் இது போன்ற குறைந்த வெப்பநிலையில் வேக வைக்கக்கூடிய முட்டையை குழந்தைகளுக்கு கொடுப்பது முற்றிலும் தவிர்ப்பது நல்லது.

இது போன்ற குளிர்சாதன பெட்டியில் முட்டைகளை வெகு நாட்கள் வைத்து சாப்பிடாமல் முடிந்த அளவிற்கு கடையிலிருந்து வாங்கிய ஓரிரு நாட்களிலே சாப்பிடுவது நல்லது.ஏனெனில் முட்டைகள் கோழி பண்ணையில் இருந்து கடைகளுக்கு கிடைக்கப் பெறவே சுமார் 10 லிருந்து 15 நாட்களாகிவிடும்.எனவே கடைகளில் இருந்து வாங்கி வரும் முட்டையை மீண்டும் நாம் சில நாட்கள் வைத்து சாப்பிட்டால் அதன் தீமைகளை சந்திக்க நேரிடும்.

Previous articleஎனக்கு இளைய தளபதி கொடுத்த சூப்பர் கிப்ட்! சாண்டி மாஸ்டர் நெகிழ்ச்சி!
Next articleபாலில் ஒரு சிட்டிகை இதை கலந்து குடித்தால் உடலுக்கு இத்தனை நன்மைகளா??