பார்பதற்கு பீன்ஸ்!பார்த்தால் பல்லி!அதிர்ச்சியில் ஊழியர்கள்!

Photo of author

By Hasini

பார்பதற்கு பீன்ஸ்!பார்த்தால் பல்லி!அதிர்ச்சியில் ஊழியர்கள்!

சென்னையில் பல உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் உள்ளன. அதில் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த கார் உதிரி பாகங்களை தயாரிக்கும் நிறுவனமான டி.ஆர்.எண்டர்ப்ரைசெஸ் என்ற நிறுவனத்தில்  500க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.சென்னையை சேர்ந்த பல நிறுவனங்கள் வேலை செய்யும் ஊழியர்களுக்கு மதிய உணவும், சில தொழிற்சாலைகளில் மூன்று வேலையும் உணவை இலவசமாகப் அவர்களே சமைத்து தருகின்றனர்.

இந்நிலையில் டி.ஆர். எண்டர்ப்ரைசெஸ் நிறுவனத்தில் கடந்த 4ம் தேதி 300 ஊழியர்கள் மதிய உணவை எடுத்துக்கொண்டனர்.அப்போது அதில் செத்து போன பல்லி இருப்பதை பார்த்து ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.மேலும் இந்த உணவை சாப்பிட்ட பலருக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டது.எனவே அவர்களை திருவள்ளூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இது குறித்து காவல்துறையினர் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டது.உடனே அவர்கள் தனியார் தொழிற்சாலையின் உணவகத்தை ஆய்வு செய்தனர்.அப்போது உணவகத்தில் கேட்டு போன துர்நாற்றம் வீசும் உணவை கண்டு கடுமையாக சுத்தமாகவும்,தூய்மையாகவும் இருக்க வேண்டும் என்றும் மீறினால் அபராதம் கட்ட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

மேலும் அதில் என்ன இருக்கிறது என பார்த்து சமையுங்கள் என்றும் கூறினார்.அங்கு வேலை செய்யும் ஊழியர்களிடமும் இது போன்ற சம்பவங்கள் தொடர்தால் எங்களை தொடர்பு கொள்ளவும் கூறினார்.உணவில் பல்லி விழுந்ததால் பென்னாலூர் பேட்டை காவல்துறையினர் டி.ஆர். எண்டர்ப்ரைசெஸ் நிறுவனத்திடமும்,ஊழியர்களிடமும் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்