தமிழ் திரையுலகைப் பொறுத்தவரையில் தற்போது உச்ச நட்சத்திரமாக இருந்து வருபவர்கள் அஜித்குமார் மற்றும் விஜய் உள்ளிட்டோர்.
இந்த இருவரும் நடிகர்கள் எடுக்கும் திரைப்படம் எதுவாக இருந்தாலும், அது திரையரங்குகளில் வெளியிடப்பட்டால் அன்று அவர்களுடைய ரசிகர்களுக்கு தீபாவளி தான்.
எதற்கு கையில் பணமிருக்கிறதோ, இல்லையோ, தனக்குப் பிடித்த நடிகரின் திரைப்படம் திரையரங்குகளில் வெளியானால் அதை பார்ப்பதற்கு மட்டும் எப்படியாவது பணத்தை புரட்டி விடுவார்கள் ரசிகர்கள்.
அதோடு தப்பித்தவறி தன்னுடைய தலைவர் எங்காவது வருகிறார் என்று தெரிந்துவிட்டால், அவர் வருவதற்கு 1 மணி நேரத்திற்கு முன்பாகவே அந்த இடத்தில் சென்று காத்திருப்பார்கள். அப்படி வெறித்தனமான ரசிகர் பட்டாளத்தை கொண்டிருப்பவர்கள் தான் தற்போதைய தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வரும் அஜித்குமார்,விஜய், உள்ளிட்ட இருவரும்.
இந்த நிலையில், நடிகர் விஜயின் பீஸ்ட் திரைப்படம் எதிர்வரும் 13ஆம் தேதி வெளியாகிறது. இந்த திரைப்படத்தை வரவேற்கும் விதமாக புதுச்சேரியின் நகரப்பகுதிகள் மட்டுமல்லாமல் கிராமப்புறங்களிலும், விஜய் ரசிகர்கள் விதவிதமான பேனர்களை வைத்திருக்கிறார்கள். அந்த சுவரொட்டிகளில் தங்களுடைய விருப்பமான அரசியல் கட்சித் தலைவர்களின் உருவப் படங்களையும் இடம் பெறச் செய்திருக்கிறார்கள்.
இதற்கு நடுவே பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் சுவரொட்டிகளை அகற்ற வேண்டும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவு பிறப்பித்தார். அந்த வகையில், உருளையன்பேட்டை விஜய் மன்றம் சார்பாக கடற்கரை காந்தி சிலைக்கு பின்புறம் நடுக்கடலில் பேனர் வைத்து தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார்கள் விஜய் ரசிகர்கள்.
இதனை புதுச்சேரி கடற்கரையில் கூடும் சுற்றுலா பயணிகளும், நடைப்பயிற்சி செல்பவரும், ஆச்சரியத்துடன் கண்டு களித்து வருகிறார்கள். புதுச்சேரியில் கடற்கரை சாலை காந்தி சிலைக்கு பின்புறம் கடலுக்கு நடுவிலுள்ள பழைய ரயில்வே மரக்கட்டையில் ஆபத்தையும் பொருட்படுத்தாமல் பேனர் வைப்பது ரசிகர்களுக்கு வழக்கமாகிவிட்டது என தெரிவிக்கிறார்கள் அந்த பகுதி வாசிகள்.