பெருமகிழ்ச்சி! இந்தியாவில் அகட பாதாளத்திற்கு சென்ற தினசரி நோய் தொற்று பாதிப்பு!

0
82

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவின் வூகான் நகரில் கண்டறியப்பட்டது கொரோனா வைரஸ். அதன் பிறகு இந்த நோய் தொற்று உலக நாடுகள் மத்தியில் சுமார் 220 நாடுகள் மற்றும் பிரதேசங்களுக்கு மேல் பரவி மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது.

இதில் அதிகமாக பாதிக்கப்பட்டது உலக வல்லரசு நாடான அமெரிக்கா தான் இன்னும் சொல்லப்போனால் இந்த நோய்த்தொற்றை சீனாதான் திட்டமிட்டு பரப்பியது, அதுவும் அமெரிக்காவை சீர்குலைப்பது தான் அதன் நோக்கம் என்று பலரும் தெரிவித்து வருகிறார்கள்.

இந்த சூழ்நிலையில், அதன் பிறகு இந்த நோய் தொற்றுக்கு எதிரான மாற்று மருந்துகளை கண்டுபிடிக்க முடியாமல் உலக நாடுகள் அத்தனையும் திக்குமுக்காடிப் போய் இருந்தனர்..

தொடக்கத்தில் இந்த நோய்த்தொற்று பாதிப்பிலிருந்து வெளியே வருவதற்கு சற்று திணறிப் போயிருந்த சீனா, பிற்காலத்தில் இந்த நோய் தொற்றிலிருந்து மெல்ல, மெல்ல, மீண்டு வந்து தற்போது அந்த நாட்டில் நோய் தொற்று இல்லை என்ற சூழ்நிலை காணப்படுகிறது.

இந்த சூழ்நிலையில், இந்தியாவில் தினசரி நோய் தொற்று பாதிப்பு கட்டுக்குள் இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. அதிலும் கடந்த சில நாட்களாக சற்றே அதிகரித்து காணப்பட்டது இந்த நோய் தொற்று.

ஆனால் நேற்றைய தினம் அந்த நிலை மாறி போனது, நேற்று முன்தினம் 1,150 பேருக்கு நோய் தொற்று பாதிப்புண்டானது நேற்று இந்த நோய்த்தொற்று எண்ணிக்கை 1054 என சரிவடைந்தது.

எனவே இன்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கின்ற தகவலினடிப்படையில் இன்று புதிதாக 861 பேருக்கு நோய் தொற்று பாதிப்பு உறுதியாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 861 பேருக்கு இந்த நோய் தொற்று பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலமாக ஒட்டுமொத்த நோய்த்தொற்று பாதிப்பு எண்ணிக்கை 4,30,36,132 என அதிகரித்திருக்கிறது.

அதேபோல நோய்த்தொற்று பாதிப்புக்குள்ளானவர்களில் ஒரே நாளில் 6 பேர் பலியாகியிருக்கிறார்கள் இதன் மூலமாக பலியானோரின் மொத்த எண்ணிக்கை 5,21,691 என்று அதிகரித்திருக்கிறது.

கடந்த 24 மணி நேரத்தில் இந்த நோய்த்தொற்று பாதிப்பிலிருந்து 929 பேர் விடுபட்டிருக்கிறார்கள். இதனால் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,25,03,383 என அதிகரித்திருக்கிறது.

அதோடு நோய் தொற்றுக்கு தற்சமயம் 11,058 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்தியாவில் இதுவரையில் 1,85,74,18,827 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியிருக்கிறது.

இதற்கு நடுவில் நாட்டில் நோய்த்தொற்று பாதிப்பை கண்டறிவதற்காக நேற்று ஒரே நாளில் 2,71,211 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாகவும், இதுவரையில் ஒட்டுமொத்தமாக 79,41,18,951 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்திருக்கிறது.