BEAUTIFUL HAIR: பெண்களே உங்கள் கூந்தலை அழகாகவும் மிருதுவானவும் மாற்ற இந்த சிறந்த வழிகளை பின்பற்றவும்!!

Photo of author

By Divya

BEAUTIFUL HAIR: பெண்களே உங்கள் கூந்தலை அழகாகவும் மிருதுவானவும் மாற்ற இந்த சிறந்த வழிகளை பின்பற்றவும்!!

பெண்களுக்கு மென்மையான,நீளமான கூந்தல் இருந்தால் அவை மேலும் அழகை கூட்டும்.அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வது,கூந்தல் பராமரிப்பில் அதிக கவனம் செலுத்துவது போன்றவற்றை செய்து வந்தால் தங்களுக்கு பிடித்த மாதிரி முடி வளர்ச்சி இருக்கும்.

உடல் சூடு,மன அழுத்தம்,தூக்கமின்மை,ஊட்டச்சத்து குறைபாடு போன்ற காரணங்களால் முடி உதிர்தல் பிரச்சனை ஏற்படுகிறது.அதேபோல் மண்டை பகுதி வறண்டு போகாமல் முடி வறட்சி ஏற்பட்டு முடி உதிரத் தொடங்கும்.

மென்மையான கூந்தல் பெற என்ன செய்யலாம்?

வாரத்தில் மூன்று முறை தலைக்கு சுத்தமான தேங்காய் எண்ணெய் அப்ளை செய்ய வேண்டும்.

கெமிக்கல் ஷாம்புக்களை தவிர்த்து சீகைக்காய்,அரப்பு போன்ற பொருட்களை பயன்படுத்தி தலைக்கு குளிக்க வேண்டும்.

செம்பருத்தி பூ மற்றும் செம்பருத்தி இலையை பேஸ்ட் போல் அரைத்து தலைக்கு தடவி குளித்து வந்தால் மென்மையான கூந்தல் கிடைக்கும்.

வெந்தயத்தை தயிருடன் ஊற வைத்து அரைத்து பேஸ்டாக்கி கொள்ளவும்.இதை தலைக்கு பயன்படுத்தி குளித்து வந்தால் தலை முடி மிருதுவாக இருக்கும்.

தேங்காய் எண்ணையில் கற்றாழை துண்டுகளை போட்டு காய்ச்சி தலைக்கு அப்ளை செய்து வந்தால் முடி வறட்சி ஏற்படாமல் இருக்கும்.

ஆலிவ் ஆயில் மற்றும் தயிரை நன்றாக மிக்ஸ் செய்து தலைக்கு பயன்படுத்தி குளித்து வந்தால் கூந்தல் மென்மையாக இருக்கும்.

அவுரி,மருந்தாணி இலையை காயவைத்து அரைத்து தலைக்கு அப்ளை செய்து வந்தால் தலைமுடி அடர் கருமையாக மாறும்.

ஒரு கொத்து கருவேப்பிலையை தினமும் சாப்பிட்டு வந்தால் கூந்தல் அடர்தியாகும்.ஆளி விதையை ஊற வைத்து அதன் ஜெல்லை தலைக்கு பயன்படுத்தி குளித்து வந்தால் கூந்தல் அடர்த்தி அதிகமாகும்.