ஆணோ பெண்ணோ! நீங்களும் அழகாக ஜொலிக்க வேண்டுமா? இதை செய்யுங்கள் போதும்
அழகு என்பது பெண்களுக்கும்,பெண்கள் அழகுக்கும் என்பது பொதுவான கருத்தாகும்.அழகு என்பது ஆண்பாலா,பெண் பாலா என்று ஒரு கருத்தும் இன்று உடைந்தது என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப ஆண், பெண் இருவருமே அழகாக மாறலாம். இதோ இந்த பியூட்டி அண்ட் ஸ்கின் கேர் டிப்ஸ். இதை பின்பற்றினாலே போதும் பார்லர் தேவையில்லை.
பியூட்டி & ஸ்கின் கேர் டிப்ஸ்:
1. முதலில் அதிகமான ஸ்வீட்ஸ், எண்ணெய் உணவுகள், கேக் போன்றவற்றை தவிர்க்கவும்.ஏனென்றால் இந்த வகையான உணவுகள் முகத்தில் கரைகள், கொப்புளங்கள் போன்றவற்றை உண்டாக்கும்.
2. காலை எழுந்தவுடன் பழங்கள் ஏதேனும் ஒன்றை சாப்பிடவும்.
3. காலை உணவில் பச்சை காய்கறிகளைச் சேர்த்துக்கொள்ளவும்.
4. உங்கள் டயட் உணவுகளில் வைட்டமின் மற்றும் புரோட்டின் இருப்பது அவசியம்.
5. ஒரு நாளில் 4 – 5 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.
6. வீட்டை விட்டு வெளியே செல்வதற்கு முன் வெயிலில் இருந்து தங்களைப் பாதுகாத்து கொள்ளவும், தூசு, மாசுகளில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள குடை, சன் ஸ்கிரீன் லோஷன் முதலியவற்றை பயன்படுத்தவும். தலை பகுதியை துணியால் முடிக்கொள்வது நல்லது.
7. காலை , மாலை என இரு வேலைகளிலும் முகத்தை நன்றாக கழுவி உங்க முகத்திற்கு ஏற்ற கிரீம்களைப் பயன்படுத்தவும்.
8. உங்கள் முகத்திற்கு சேராத புதிய வகையான காஸ்மெட்டிக்ஸ், ஜெல், கிரீம் போன்றவற்றைப் பயன்படுத்தி உங்கள் முகத்தை நீங்களே கெடுத்துக் கொள்ள வேண்டாம்.
9. தேங்காய் எண்ணெயை முகத்திற்கு பயன்படுத்தினால் முகம் மென்மையாக இருக்கும்.
10. உங்கள் முகத்திற்கு ஏற்ற பேஸ் மாஸ்க்கைப் போடவும்.
11. மாதத்திற்கு ஒரு முறையாவது உடலை மசாஜ் செய்யவும்.