சின்னத்திரை தொடர்கள் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் மிருணல் தாகூர், டப்பிங் செய்து ஒளிபரப்பப்பட்ட ‘இரு மலர்கள்’ சீரியலில் அம்மு என்கிற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் இவர். இந்த ஆண்டில் வெளியான ‘சீதா ராமம்’ படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்து மீண்டும் ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்திருக்கிறார். 30 வயதாகும் இவரின் அழகின் ரசிகசியத்தை தெரிந்துக்கொள்ள பலரும் ஆசைப்படுகின்றனர், இந்த பகுதியில் இவர் அழகின் ரகசியத்தை பற்றி நாங்கள் உங்களுக்கு சொல்கிறோம்.
பெரும்பாலும் மிருணல் தாகூர் கெமிக்கல் நிறைந்த அழகு சாதன பொருட்களை பயன்படுத்துவதை காட்டிலும் இயர்கையான ஆர்கானிக் நிறைந்த அழகு சாதனங்களை பயன்படுத்துவதை தான் விரும்புகிறார் மற்றும் அதனையே பின்பற்றுகிறாராம். குறிப்பாக அவரது பளபளப்பான சருமத்திற்கும், அழகின் ரகசியத்திற்கு ஒரு செடி தான் காரணமாம், அது ஒன்றும் பெரிய விலையுயர்ந்த செடி கிடையாது, சாதாரணமாக நமது வீட்டின் அருகில் வளர்ந்து கிடக்கும் சோற்றுக்கற்றாழை தான். சோற்றுக்கற்றாழை எளிதில் கிடைக்கக்கூடிய ஒன்று, இதன் ஜெல்லை தான் அவரை தனது அழகிற்கு பயன்படுத்துகிறார்.
சன்ஸ்க்ரீனாக அவர் சோற்றுக்கற்றாழை ஜெல்லை தான் பயன்படுத்துகிறார், அவர் வெளியில் செல்லும்போது முதலில் தனது முகத்தில் குளிர்ந்த நீரை வைத்து துடைத்துவிட்டு அதன் பின்னர் சோற்றுக்கற்றாழை ஜெல்லை தடவிக்கொள்வாராம். பேஸ் மாஸ்க்குக்கு அவர் பப்பாளியை பயன்படுத்துகிறார், முகத்தில் பப்பாளியை தேய்ப்பது மற்றும் தேனுடன் சர்க்க்கரை கலந்து தேய்ப்பது போன்றவற்றை செய்கிறார். மேலும் அவர் முக்கியமாக செய்யும் இரண்டு விஷயங்கள் அதிகம் தண்ணீர் குடிப்பது மற்றும் தினமும் தவறாமல் வொர்க்அவுட் செய்வது தான், இவைதான் இவர் அழகின் ரகசியம்.