கருப்பாக இருக்கும் உதட்டை கலராக மாற்ற ஒரு எளிய வழி

Photo of author

By Anand

கருப்பாக இருக்கும் உதட்டை கலராக மாற்ற ஒரு எளிய வழி

 

பெண்கள் ஒவ்வொருவரும் தங்களை மற்றவர்களை விட அழகாக காட்டிக் கொள்ளவே நினைப்பர்.அந்த வகையில் பெண்களின் அழகில் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கண்கள் மற்றும் உதடு கருதப்படுகிறது.

 

இதனால் தான் பெரும்பாலான பெண்கள் தங்களது உதட்டுக்கு லிப்ஸ்டிக் போடும் வழக்கத்தை கடைபிடித்து வருகின்றனர்.ஆனால் பலருக்கு உதடு கருப்பாக இருக்கும் பட்சத்தில் லிப்ஸ்டிக் போட்டாலும் பெண்களுக்கு திருப்தி ஏற்படாது.

 

அந்த வகையில் இயற்கையான முறையில் கருப்பாக இருக்கும் உதட்டை கலராக மாற்றும் வழியை இப்போது பார்ப்போம்.

 

தேவையான பொருட்கள்.:

 

எலுமிச்சை பழம் – அரைத்துண்டு,

வெள்ளை சர்க்கரை – சிறிதளவு,

தேன் – ஒரு தேக்கரண்டி,

தேங்காய் எண்ணெய் – ஒரு தேக்கரண்டி

 

செய்முறை:

 

முதலில் கொடுக்கபட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.

 

பிறகு எலுமிச்சை பழம் மீது சிறிதளவு வெள்ளை சர்க்கரை தூவி உதடுகள் மீது லேசாக தடவி விடவும்.

 

இதனை 5 நிமிடம் செய்ய வேண்டும்.

 

பிறகு இதை போல ஒரு தேக்கரண்டி தேன் மற்றும் தேங்காய் எண்ணெய் எடுத்துக்கொள்ளவும்.

 

இரண்டையும் நன்கு கலந்து உதடு மீது தடவி 15 நிமிடம் உலர வைக்கவும்.

 

இதனை தொடர்ந்து 14 நாட்கள் காலை மற்றும் மாலை ஆகிய இரண்டு வேளைகள் செய்து வந்தால் உதடு எவ்ளோ கருப்பாக இருந்தாலும் கலராக மற்ற முடியும்.

 

இது எந்த வித பக்கவிளைவு இல்லாத இயற்கையான மருத்துவம் ஆகும்.மேலும் இது மிகவும் எளிதான வழிமுறை ஆகும்.