சீரான நிறத்தில் முகத்தை வைத்து கொள்ள வேண்டுமா? இதை பின்பற்றுங்கள்

Photo of author

By CineDesk

சீரான நிறத்தில் முகத்தை வைத்து கொள்ள வேண்டுமா? இதை பின்பற்றுங்கள்

பெரும்பாலான பெண்கள் தங்களை அழகாக மாற்றவே அதிக நேரத்தை செலவு செய்து வருகின்றனர்.அதே போல சில ஏற்கனவே அழகாக இருக்கும் நபர்கள் அதை தக்க வைத்துக் கொள்ள கடும் சிரமத்தை மேற்கொள்கின்றனர். இவர்கள் அனைவருக்கும் பயன்படுவது தான் இயற்கையாக கிடைக்கும் பார்லி. பார்லியை உணவில் மட்டுமல்ல நம் முகத்திலும் பயன்படுத்தலாம்.ஆம் இதை பயன்படுத்தினால் முகத்தை அழகாக வைத்துக் கொள்ள முடியும்.இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

பார்லி பேஸ் ஸ்க்ரப்:

தேவையான பொருட்கள்:

1. பார்லி பொடி – 1 டீஸ்பூன்.

2. லெமன் ஜூஸ்- 2 டீஸ்பூன்.

3. பால்.

செய்முறை: 1 டீஸ்பூன் பார்லி பொடியுடன் பாலை சேர்க்கவும். நன்றாக கலக்கவும். மென்மையான பதத்திற்கு வரும் வரை நன்றாக கலக்கவும். பிறகு 2 டீஸ்பூன் லெமன் ஜூஷை சேர்க்கவும்.கலந்த கலவையை முகத்தில் தடவவும். 15 நிமிடம் கழித்து காய்ந்தவுடன் முகத்தை ஸ்க்ரப் செய்யவும். இறுதியாக மிதமான நீரில் முகத்தை கழுவி விடவும். காட்டன் துணியைக் கொண்டு முகத்தை துடைக்கவும்.இப்படியே சில நாட்கள் தொடர்ந்து செய்து வந்தால் உங்கள் முகவும் பொலிவாக மாறும்