பள்ளி மாணவன் தாகத்திற்காக தண்ணீர் குடித்ததால்!. கொடூரமாக தாக்கிய ஈவு இரக்கமில்லாத வகுப்பாசிரியர்!.

Photo of author

By Parthipan K

பள்ளி மாணவன் தாகத்திற்காக தண்ணீர் குடித்ததால்!. கொடூரமாக தாக்கிய ஈவு இரக்கமில்லாத வகுப்பாசிரியர்!.

Parthipan K

பள்ளி மாணவன் தாகத்திற்காக தண்ணீர் குடித்ததால்!. கொடூரமாக தாக்கிய ஈவு இரக்கமில்லாத வகுப்பாசிரியர்!.

 

ராஜஸ்தான் மாநிலம் ஜாலூர் மாவட்டம் சுரனா என்கின்ற கிராமத்தை சேர்ந்தவர் இந்திர மேக்வல். இவருடைய வயது 9.இவர் பட்டியலின சமூகத்தை சேர்ந்தவர் இந்த மாணவர். இவர் அதே கிராமத்தில் அரசு பள்ளியில் படித்து வந்திருந்தான். இந்நிலையில் கடந்த வாரம் அந்த மாணவனுக்கு வகுப்பில் தண்ணீர் தாகம் எடுத்ததாக கூறப்படுகிறது. தானும் தண்ணீர் எடுத்து வரவில்லை என்று தாகத்துடன் நின்றிருந்தார். பின்னர் அப்பள்ளியில் வைத்திருந்த மண்பானை ஒன்றில் தண்ணீர் இருப்பதை கண்டான். பிறகு அவ்விடத்திற்குச் சென்று பானையை தொட்டு தண்ணீர் எடுத்து குடித்துள்ளான். இதைப் பார்த்த அப்பள்ளியின் வகுப்பு ஆசிரியர் ஓடி வந்து அந்த மாணவர் கையில் இருந்த டம்ளரை பிடுங்கி எறிந்துள்ளார். அதுமட்டுமல்லாமல் அந்த மாணவனை கடுமையாக தாக்கியும் உள்ளார். கோர தாக்குதலில் அந்த மாணவன் மூக்க, காது, கண்ணு போன்ற பல இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டிருந்தது. இதனால் அவ்விடத்திலேயே திடீரென மயங்கி விழுந்தான். இதை அறிந்த அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து மாணவனை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் மேல் சிகிச்சைக்காக உதய்ப்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் மாணவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான். மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த ஆசிரியரை தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். மேலும் ஆசிரியர் மீது கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இதனால் அங்கிருந்த சக மாணவர்களும் பயத்தில் நடுங்கினர்.