கொஞ்சி பேச கொஞ்ச நேரம் ஒதுக்கலாமே!

Photo of author

By Sakthi

இனிமை நிறைந்தது தான் இல்லறம் அந்த இனிமையே அனுபவிக்காமல் எப்போதும் எலியும், பூனையுமாக ஜோடிகள் மிக அதிக இல்லறத்தில் இனிமை அனுபவிக்க கணவன், மனைவி இருவருக்கும் பரஸ்பரம் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும்.

வாழ்க்கையின் பாதி வெற்றி விட்டுக்கொடுப்பதிலிருக்கிறது மீதி வெற்றி கணவனிடமிருந்து மனைவியும் மனைவியிடமிருந்து கணவனும், இன்பத்தை கேட்டு பெறுவதிலிருக்கிறது.

இதில் முழு வெற்றியை பெற வேண்டுமானால் கணவன், மனைவி, உள்ளிட்ட இருவரும் அனைத்தையும் மனம் விட்டுப் பேச வேண்டும். அதுவும் இருவரும் மனம்விட்டு கொஞ்சலாக பேசுவதற்கு கொஞ்சநேரம் ஒதுக்கினாலே போதுமானது. அவர்களுடைய பிரச்சனைகள் அனைத்தும் தானே முடிந்துவிடும்.

அனேக ஆண்கள் தங்களுடைய அலுவலகப் பிரச்சினைகளை தன்னுடைய மனைவியிடம் தெரிவிப்பதில்லை, ஆனாலும் அவ்வாறு தெரிவிப்பதில் தவறு ஏதுமில்லை தன்னுடைய உடல், மன நல பிரச்சனைகளை மனைவி கணவரிடம் தெள்ளத் தெளிவாக எடுத்துக் கூறலாம்.

இவ்வாறு இதனை பகிர்ந்து கொள்வது ஆறுதல் வழங்குவதுடன் அன்பை வலுப்படுத்தும். ஒருவர் மீது ஒருவருக்கு நம்பிக்கை ஏற்படும் வாழ்க்கை இனிமையாகும்.

கணவன்-மனைவிக்கிடையே பிரச்சனைகள் எவ்வாறாவது முளைத்துக் கொண்டுதான் உள்ளது. ஆனாலும் ஏதோ ஒரு காரணத்தை முன்வைத்து பிரச்சினை பெரிதாகும் போது யாராவது ஒருவர் கவனத்துடன் இருந்தால் நல்லதொரு தீர்வு கிடைத்துவிடும்.

ஒருவருடைய மௌனத்தை மற்றொருவர் புரிந்து கொண்டு தேவையில்லாத பேச்சுக்களை தவிர்க்கலாம். பிறகு அந்த மௌனமே இருவரையும் சிந்திப்பதற்கு தூண்டும் அதுவே தவறு யார் பக்கம் என்பதை புரிய வைத்து விடும். தவறுகள் உணரப்பட்ட சமாதானம் என்பது தானாகவே வந்துவிடும்.

எந்த ஒரு ஈகோவுமில்லாமல் மன்னிப்பு கேட்க பழகிக்கொண்டால் கணவன்-மனைவிக்கிடையே பிரச்சனைகள் தானாக மறைந்து விடும். தவறு செய்தது அவர்கள் தான் என அவரே இறங்கி வரட்டும் என்று மனைவி இருப்பதும், நான் ஆண் அவள் தான் இறங்கி வரவேண்டும் என்று கணவன் சற்றே தலை கனத்துடன் இருப்பதும், பிரச்சனையின் தாக்கத்தை அதிகரித்துவிடும்.

இருவருக்குமே தன்மான உணர்வு என்பது இருக்கிறது என்பதால் விட்டுக் கொடுப்பதில் இருவரும் போட்டி போட்டுக்கொண்டு பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ள முன்வர வேண்டும்.

அது ஆணோ, பெண்ணோ, யாராக இருந்தாலும் தன்னுடைய துணையிடம் மரியாதையை காட்டுங்கள் ஒருவர் மற்றவரை ஏளனமாக எண்ணவேண்டாம். பிறரின் முன்பும் துணைவியரை தரக்குறைவாக பேச வேண்டாம்.

கணவன்-மனைவிக்குள் மனோதாபம் உண்டானால் அவர்களுக்குள் பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும். இல்லாவிடில் சிறிது இடைவெளிவிட்டு அதன் பிறகு சேர்ந்து கொள்ளுங்கள். அப்படி இல்லாமல் ஒருவர் மற்றவரின் குடும்பத்தை பற்றி கேவலமாக பேசுவது என்பது அறவே கூடாது.

ஆனாலும் மனம் விட்டு பேசுவதாக நினைத்துக் கொண்டு உடன் பிறந்தவர்கள், உறவுகள் தொடர்பான ரகசியங்கள், அந்தரங்க பிரச்சனைகளை பகிர்வதை தவிர்க்க வேண்டும்.

அப்படித் தவிர்க்காவிட்டால் அது கணவன்-மனைவிக்கிடையே மட்டுமல்லாமல் உறவுகளுக்கிடையேயும் கடைசி வரையில் பிரிவை ஏற்படுத்தி விடும். அதோடு திருமணத்திற்கு முந்தைய காதல் தொடர்பாகவும், ஆண், பெண், நண்பர்கள் தொடர்பாகவோ பகிர்ந்துகொண்டு பிரச்சனைகளின் போது அதனை தோண்டி எடுத்து பேசுவதை இருவருமே தவிர்க்க வேண்டும்.

மனைவி கணவரிடம் பாலுறவு தொடர்பாக வெளிப்படையாக பேசினால் தவறு என்ற கருத்து ஆண்கள் மத்தியிலும், நம்முடைய சமூகத்தில் பரவலாக காணப்படுகிறது. அது மிகவும் தவறு தாம்பத்தியம் கணவன், மனைவியின் அடிப்படை உரிமை தாம்பத்தியம் ஆரோக்கியமாக இருந்தால் ஜோடிகளுக்குள் உண்டாகும் பெரிய பிரச்சனை கூட தானாகவே மறைந்துவிடும்.

கோபம், பொறாமை, தலைக்கணம், உள்ளிட்ட அனைத்தையும் வெளியேற்றும் ஆற்றல் அதற்குண்டு கணவன், மனைவி இருவருமே தாங்கள் பாலியல் தேவைகளை தங்களுக்குள் வெளிப்படையாக பகிர்ந்து கொண்டாலே இல்லற பிரச்சனைகள் இல்லாமல் போய்விடும் பேசித்தான் பார்க்கலாமே.