மனதில் புது நம்பிக்கை பிறக்க மனோமய கோசம்!

0
75

பாய் விரிப்பில் நிமிர்ந்து அமர்ந்து கொள்ள வேண்டும் முதுகெலும்பு நேராக இருக்கவேண்டும். இருகால்களையும் நீட்ட வேண்டும், ஒவ்வொரு காலாக மடித்து இடது காலை வலது தொடையிலும், வலது காலை இடது தொடை மேலும், போட வேண்டும். இரு கைகளையும் சின் முத்திரையில் வைக்க வேண்டும், பெருவிரலை ஆட்காட்டி விரல் நுனியில் இணைக்க வேண்டும்.

மற்ற விரல்கள் தரையை நோக்கி இருக்கவேண்டும், மெதுவாக மூச்சை இழுத்து மிகவும் மெதுவாக மூச்சை வெளிவிட வேண்டும். 10 முறைகள் இதனை செய்த பிறகு உங்களுடைய மனதை நெற்றிப் புருவ மையத்தில் கூர்ந்து 5 நிமிடங்கள் மூச்சோட்டத்தை தியானிக்கவும்,

இந்த பத்மாசனத்தில் சின் முத்திரை செய்யும் பொழுது மனதிலுள்ள எதிர்மறை எண்ணங்கள், சோம்பல், பொறாமை, பேராசை, வெறுப்பு, உள்ளிட்டவை அழிக்கின்றது. நம்பிக்கை வளரும், அன்பு மலரும், எதையும் சாதிக்கலாம் என்ற எண்ணம் தோன்றும், பய உணர்வு நீங்கும், தெளிந்த சிந்தனை பிறக்கும், எப்பொழுதும் மனம் உற்சாகத்துடன் இருக்கும் என்கிறார்கள்.