கணவன் மனைவி இடையே நல் உறவு மேம்பட இந்த மூலையில் படுக்கையறை இருக்க வேண்டும்!!

Photo of author

By Divya

நம் வசிப்பிடம் வாஸ்துப்படி இருக்க வேண்டியது மிக மிக முக்கியம்.வீட்டில் தென் மேற்கு மூலை ஆற்றல் மூலையாக கருதப்படுவதால் அவ்விடத்தில் வாசல் வைக்கப்படாது.ஒருவேளை தென்மேற்கு மூலையில் வாசல் இருந்தால் அது நம் வீட்டின் ஆற்றலை வெளியேற்றிவிடும் என்று நம்பப்படுகிறது.

இந்த தென்மேற்கு மூலையை தான் குபேர மூலை என்று அழைக்கிறோம்.அனைவரது வீடுகளிலும் தென் மேற்கு மூலை உயரமாகவும்,ஈசனி மூலை சற்று தாழ்வாகவும் இருக்கிறது.வாஸ்துப்படி இந்த தென்மேற்கு மூலையில் படுக்கையறை இருக்க வேண்டும்.உங்கள் வீட்டில் தென்மேற்கு மூலையில் படுக்கையறை இருந்தால் கணவன் மனைவி இடையே சண்டை ஏற்படாமல் நல் உறவு மேம்படும்.

இந்த தென்மேற்கு மூலைக்கு நைருதி மூலை என்ற மற்றொரு பெயரும் உண்டு.புதிதாக வீடு கட்டுபவர்கள் இதுபோன்ற வாஸ்து சாஸ்திரங்களை அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.இந்த தென் மேற்கு மூலையில் சமையலறையை வைக்கக் கூடாது.தென்மேற்கு மூலையில் சமையலறை உள்ள வீட்டிற்கு குடி பெயருவதை தவிர்க்க வேண்டும்.

அதேபோல் தென்மேற்கு மூலையில் அலமாரி இருந்தால் பணம் சேராது.தென்மேற்கு மூலையில் கழிவறை அமைக்கக் கூடாது.வாஸ்துப்படி கட்டப்படாத வீட்டில் குடி பெயர்ந்தால் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.கணவன் மனைவி இடையே அடிக்கடி பிரச்சனைகள் ஏற்படும்.எனவே தென்மேற்கு மூலையில் படுக்கை அறை இருக்கும் வீட்டிற்கு மட்டுமே குடிபுக வேண்டும்.நீங்கள் புதிதாக கட்டும் வீட்டின் தென்மேற்கு மூலையில் படுக்கை அறையை அமைத்து கட்ட வேண்டும்.