பட்டாசு வெடிக்கச் செல்வதற்கு முன் இதை செய்ய வேண்டாம்! தமிழக அரசு எச்சரிக்கை

Photo of author

By Parthipan K

தீபாவளி பண்டிகையை நாளை  நாட்டு மக்கள் அனைவரும் கோலாகலமாக கொண்டாட தயாராகி வருகிறார்கள். கரோனா பொது முடக்கம் காரணமாக வீடுகளுக்குள் முடங்கி இருந்த  மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக தீபாவளியை கொண்டாட தயாராகி வருகிறார்கள்.

எனினும், தமிழகத்தில் பட்டாசு வெடிக்க இரண்டு மணி நேரம் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அனுமதி வழங்கப்பட்ட நேரத்தை தவிர பிற நேரங்களில் பட்டாசு வெடித்தால் அபராதம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்த நிலையில் பட்டாசு  வெடிக்கச்   செல்வதற்கு முன் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் கையில் கிருமிநாசினி பூசிக் கொள்வதை தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கிருமிநாசினிகள் பெரும்பான்மையாக ஆல்கஹால் கலந்திருக்ககூடும் .எனவே, அவை எளிதில் தீப்பற்றும் அபாயம் உள்ளது .

ஆகவே காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறை வெளியிட்டிருக்கும் அறிவுறுத்தலின்படி முறையாக பின்பற்றி பாதுகாப்பான தீபாவளித் திருநாளை கொண்டாட பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.