உலகமெங்கும் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் ஆடி வருவதால் இந்தியா உட்பட பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் மக்கள் அத்தியாவசிய தேவைகளை தவிர வேறு எந்த காரணங்களுக்காகவும் வெளியில் வரவேண்டாம் என்று பிரதமர் மற்றும் அனைத்து மாநில முதல்வர்களும் உத்தரவிட்டனர்.
பொது இடங்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வாங்க வரும்போது மக்கள் முக கவசம் அணிய வேண்டும் சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுத்தப்பட்டது. பொது வெளியில் சென்று வந்த பிறகு கைகளை 20 வினாடிகள் சோப்பு போட்டு கழுவ வேண்டும் என்று விழிப்புணர்வு பிரச்சாரங்கள் செய்யப்பட்டன.
இந்த நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஆதரவற்ற ஒருவர் சாலை ஓரமாக படுத்து இருந்ததாக தெரிகிறது. அவரைப் பார்த்த காவல்துறையினர் உணவு பொட்டலமும் நீரும் கொண்டு வந்தனர்.
இதை பார்த்த அந்த நபர் தன் அருகில் யாரும் வரவேண்டாம் உணவு பொட்டலத்தை சமூக இடைவெளி விட்டு வைக்குமாறு கூறுகிறார். அவ்வாறு உணவு பொட்டத்தை வைக்க அருகில் வரும்போது தன் சட்டையால் முகத்தை மூடிக்கொண்டு வைத்துவிட்டு செல்ல சொல்கிறார்.
சம்பந்தப்பட்ட காவல் துறையினரும் உணவு பொட்டலத்தை வைத்து விட்டு அங்கிருந்து செல்கின்றனர், அந்த உணவை எடுத்து தன் அருகில் எடுத்து கொள்கிறார் பிச்சைக்காரர். இதனை பார்த்த மக்கள் காவல்துறையினரின் மனிதாபிமானத்தையும் பிச்சைக்காரரின் சமூக அக்கரையும் பாராட்டி வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.