இந்திய ராணுவத்திடம் அடி வாங்கிய சீன ராணுவ அதிகாரிக்கு கிடைத்த கவுரவம்!

0
279

சீனாவின் பெய்ஜிங்கில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நாளை மறுநாள் (பிப்ரவரி 4) தொடங்கி 20ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான, ஒலிம்பிக் ஜோதியை, சீனா முழுவதும் கொண்டு செல்லப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஒலிம்பிக் ஜோதியை ராணுவ கமாண்டர் ஒருவருக்கு கொடுத்து, சீனா கவுரப்படுத்தியுள்ளது. ஒலிம்பிக் போட்டி நடைபெற உள்ள இடத்தில், குய் ஃபபோவ் என்ற அந்த சீன ராணுவ கமாண்டரிடம் ஒப்படைக்கப்பட்டு, ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. நாளை மறுநாள் கோலாகலமாக போட்டி தொடங்க உள்ளது.

குய் ஃபபோவ் என்ற அந்த சீன ராணுவ கமாண்டர், இந்தியாவின் லடாக் எல்லையில் கடந்த 2020ஆம் ஆண்டு நடந்த மோதலில், இந்திய ராணுவத்திடம் அடி வாங்கியவராவார். அதில், தலையில் பலத்த காயமடைந்த, அந்த ராணுவ கமாண்டர், சிகிச்சை பெற்று தற்போது குணமடைந்துள்ளார்.

இரு தரப்பு ராணுவமும் மோதிக் கொண்ட போது, இந்தியா தரப்பில் 20 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். சீனா தரப்பில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில், சீனா பதிலளிக்காமல் இருந்தது. 8 மாதங்களுக்குப் பிறகே, 8 வீரர்கள் உயிரிழந்ததாக உடல்களை உறவினர்களிடம் ஒப்படைத்தது குறிப்பிடத்தக்கது.

Previous article99.9% ஒமைக்ரான் கொரோனா பாதிப்பு! அமெரிக்கர்கள் அதிர்ச்சி!
Next articleவிக்ரம் பிரபு நடிக்கும் புதிய படத்தில் பழைய ஜோடி! யார் தெரியுமா?