தலைமுடி நன்கு அடர்த்தியாக வளர நெல்லிக்காய் ஜூஸ்,வெந்தய பானம் போன்றவற்றை சாப்பிடலாம்.அடிக்கடி முடி கொட்டல் பிரச்சனை இருப்பவர்கள் இந்த வைத்திய முறைகளை பின்பற்றலாம்.
தேவையான பொருட்கள்:-
1)பெரிய நெல்லிக்காய் – இரண்டு
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்
செய்முறை விளக்கம்:-
முதலில் இரண்டு அல்லது மூன்று பெரிய நெல்லிக்காய் எடுத்து பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.பின்னர் இதை மிக்சர் ஜாரில் போட்டு ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி ஜூஸாக அரைத்துக் கொள்ளுங்கள்.இந்த ஜூஸை வடிகட்டி தேன் கலந்து பருகி வந்தால் தலைமுடி வளர்ச்சி நன்றாக இருக்கும்.
தேவையான பொருட்கள்:-
1)கறிவேப்பிலை – ஒரு கொத்து
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்
செய்முறை விளக்கம்:-
முதலில் ஒரு கொத்து கறிவேப்பிலையை தண்ணீர் விட்டு அலசி எடுத்துக் கொள்ள வேண்டும்.பிறகு இதை மிக்சர் ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றி ஜூஸாக அரைக்க வேண்டும்.இந்த ஜூஸை வடிகட்டி பருகி வந்தால் தலைமுடி வளர்ச்சி நன்றாக இருக்கும்.
தேவையான பொருட்கள்:-
1)வெந்தயம் – ஒரு தேக்கரண்டி
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்
செய்முறை விளக்கம்:-
முதலில் ஒரு தேக்கரண்டி வெந்தயத்தை தண்ணீரில் இரண்டு அல்லது மூன்று முறை அலசி எடுத்துக் கொள்ளுங்கள்.
பிறகு இதை கிண்ணத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி ஆறு அல்லது ஏழு மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.இந்த ஊறவைத்த வெந்தயத்தை சாப்பிட்டு வந்தால் தலைமுடி வளர்ச்சி நன்றாக இருக்கும்.