தற்போது இந்திய அணி நியூசிலாந்து உடனான டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது இதனை தொடர்ந்து 2025ல் ஆஸ்திரேலியா உடன் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடரை தொடர்ந்து இங்கிலாந்து உடன் விளையாடவுள்ளது. இதனால் ஐ பி எல் தொடரில் இருந்து பென் ஸ்டோக்ஸ் விலக போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிசிசிஐ தரப்பில் இருந்து ipl போட்டிகளில் பங்கேற்கும் வெளிநாட்டு வீரர்களுக்கு புதிய விதிகள் உருவாக்கப்பட்டு வெளியிட்டது. ஐ பி எல் போட்டிகளில் பங்கேற்ற பின்னர் கடைசி நேரத்தில் தொடரை விட்டு வெளியேறினால் அவர் மீண்டும் ipl தொடரில் விளையாட 2 ஆண்டுகள் தடை விதிக்கப்படும்.
அதே போல் ஐ பி எல் மெகா ஏலத்தில் பங்கேற்காத வீரர்கள் மினி ஏலத்தில் பங்கேற்க அனுமதி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.அதுமட்டுமல்லாமல் இந்திய வீரர்கள் மினி ஏலத்தில் எந்த தொகைக்கு வாங்கப்படுகிரார்களோ அந்த தொகைதான் வழங்கப்படும் என்றும் அறிவித்தது.
பெரும்பாலும் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணி வீரர்கள் மெகா ஏலத்தில் பங்கேற்காமல் மினி ஏலத்தில் மட்டும் பங்கேற்று வந்தனர். அதற்கு செக் வைக்கும் வகையில் பிசிசிஐ புதிய விதிகளை கொண்டு வந்துள்ளது. இந்த ஐ பி எல் ல் பென் ஸ்டோகேஸ் கலந்து கொள்ளும் முடிவில் இருந்த நிலையில் இந்த விதிகள் காரணமாக ipl தொடரில் இருந்து விலக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .
அவர் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில் ஒரு நாள் போட்டிகளிலும் விளையாடுவதில்லை. டெஸ்ட் தொடரில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். இதன் காரணமாக ipl தொடரில் விளையாட மாட்டார் என தகவல் வெளியாகி வருகிறது.